8 Nov 2020

கேதாரகௌரி விரதத்தை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் அடியவர்களுக்கு விசேட அறிவிதல்.

SHARE

கேதாரகௌரி விரதத்தை முன்னிட்டு கொக்கட்டிச்சோலை தான்தோன்றியீஸ்வரர் ஆலயம் அடியவர்களுக்கு விசேட அறிவிதல்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலயத்தில் வருடாந்த கேதாரகௌரி விரதம் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற கொவிட் - 19 எனப்படுகின்ற கெரோனோ நோயின் நிமிர்த்தம் கேதாரகௌரி விரதத்தை அனுஸ்ட்டிக்கும் பக்கதர்களை ஆலயத்திற்குள் உள்வாங்காவாண்ணம் ஆலய பூஜை புணஸ்காரங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.  என வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது. இவ்விடையம் தொடர்பில் அந்நிருவாகம் மேலும் தெரிவிக்கையில்….

எனினும் எதிர்வரும் 2020.11.14 ஆம் திகதி இந்த கேதார கௌரி விரதம  அனுஸ்ட்டிக்கும் அடியவர்களுக்கு காப்பு வழங்கும் நிகழ்வு வழங்குவது வழமை. ஆனாலும் இவ்வருடம் இவ்வாறு காப்பு வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்ற கொடிய நோயாகவுள்ள கொரோனா நோயின் நிமிர்த்தம் நாம் வழக்கமாக வருடம்தோறும் வழங்கும் கேதார கௌரி காப்புக்களை முற்கூட்டியே வழங்கி வருகின்றோம். அந்த வகையில் விரதமிருக்கும் அடிவர்கள் அவர்களின் வீடுகளிலே வைத்து வழிபடுகின்ற கும்பத்தில் நாம் முன்கூட்டியே வழங்கும் காப்பினை வைத்து வழிபாடு செய்து, பின்னர் இறுதிநாளன்று ஆலயத்திற்குக் கொண்டுவரும் அடையாளப் பொருட்களுடன் அந்தக் காப்பையும் எடுத்துவந்து ஆலயத்திலே வைத்து தாங்களாகவே எடுத்து காப்பை அணிந்து கொள்ளலாம். என்பதை அடியவர்கள் கருத்திற் கொள்ள வேண்டும். எனவே கேதாரகௌரி விரமதிருக்கம் அடியவர்களுக்கு இறுதிநாளன்று ஆலய குருமாரால் காப்பு வழங்கப்படமாட்டாது, அதற்காக முற்கூட்டியே எமது ஆலய கரும பீடத்தில் காப்பிபைப் பெற்றுக் கொள்ளலாம் என்பதையும் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றியீஸ்வரர் ஆலய பரிபாலன சபiயினர் தெரிவித்துள்ளனர். 







SHARE

Author: verified_user

0 Comments: