8 Nov 2020

முடங்கிப் போயுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழிலுபகரணங்களும் உலருணவுப் பொதிகளும் விநியோகம்.

SHARE

முடங்கிப் போயுள்ள குடும்பங்களுக்கு வாழ்வாதார தொழிலுபகரணங்களும் உலருணவுப் பொதிகளும் விநியோகம்.

கொரோனா வைரஸ் நிலைமையில் முடங்கிப் போயுள்ள இலகுவில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கும் தொற்றொதுக்கலுக்கு உட்பட்டுள்ள குடும்பங்களுக்கும் உலருணவுப் பொருட்களையும் வாழ்வாதார உதவிக்கான உபகரணங்களையும் வழங்கி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி மயூரி ஜனன் தெரிவித்தார்.

இவ்வகையான உதவிகள் விநியோகம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைக்காலை கிரமமக்களுக்கும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் இலுப்படிச்சேனை கிராமத்தவர்களுக்கும் ஞாயிறன்று 08.11.2020 இடம்பெற்றன.

ஏறாவூர் பொலிஸாரின் வழிகாட்டுதலின்  பேரில் கொரோனா வைரஸ் தொற்றொதுக்கலுக்குட்பட்டுள்ள குடும்பங்களுக்;கான உலருணவு விநியோகத்தின்போது ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த பொலிஸ் கொரோனா வைரஸ் தடுப்பு செயலணியும் இணைந்து கொண்டது.

நிவாரண விநியோகப் பணிகளிலும் வாழ்வாதார உதவு ஊக்க கருவிகள் வழங்குவதிலும் அருவி பெண்கள் வலையமைப்பின் உதவி இணைப்பாளர் எஸ்.தர்ஷினி வெளிக்கள உத்தியோகத்தர் என்.லுனிற்றா நிருவாக அலுவலர் எஸ்.ரம்யா ஆகியோர் ஈடுபட்டனர். 










SHARE

Author: verified_user

0 Comments: