1 Nov 2020

களுதாவளையில் ஒருவர் கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிசார், சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வில் மும்முரம்.

SHARE

களுதாவளையில் ஒருவர் கொரோனா தொற்று என அடையாளம் காணப்பட்டதையடுத்து பொலிசார், சுகாதாரத் துறையினர் விழிப்புணர்வில் மும்முரம்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து குறித்த நபரை ஞாயிற்றுக்கிழமை (01) காலை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த நபர் தங்கியிருந்த வீட்டிலுள்ளவர்கள் அவர்களுடைய வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவ்வீட்டிற்கு வெளிநபர்களும் வருவதற்கு 14 நாட்களுக்குத் தவிர்த்துக் கொள்ளுமாறும் அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகர் அடையாளப்படுத்தியுள்ளார்.

“கொரோனா நோய் பரவுதலைத் தடுத்தல்” இது ஓர் சுய தனிமைப்படுத்தலுக்குட்பட்ட வீடாகும்.  எனவே இவ்வீட்டிற்கு வெளி நபர்கள் வருவதை, தவிர்த்துக் கொள்ளவும் என  எழுதி அப்பகுதி பொதுசுகாதார பரிசோதகரினால் குறித்த கொரோனா நோயாளி இருந்த வீட்டின் கதவில் ஒட்டப்பட்டுள்ளதுடன், குறித்த நபர் இருந்த வீடு அண்டிய பகுதியில் அமைந்திருந்த வர்த்தக நிலையங்களும், சுகாதாரப் பரிசோதகரின் அறிவுறுத்தலுக்கமைய மூடப்பட்டுள்ளன.

எனினும் பிரதேசஙம் எங்கும் பொதுசுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மிகுந்த அவதானிப்புக்களுடன் சேவையிலீடுபட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் தோறும் களுவாஞ்சிகுடி பொலிசார் ஒலிபெருக்கி மூலம் கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் பாதுகாப்பாக வீட்டில் இருக்குமாறு அறிவித்து வருகின்றனர்.

“களுவாஞ்சிகுடி பொலிசாரினால் விடுக்கப்படும் விசேட அறிவித்தால்” களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதி களுதாவளை – 04 ஆம் பிரிவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு பி.சி.ஆர். பரிசோதரன மூலம், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வராமல், வீட்டிலே இருந்து தங்களது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறும், சுகாதார ரீதியில் ஏதாவது தொற்றுக்கள் தொடர்பில் அறிகுறிகள் காணப்படின், உரிய பொதுசுகாதார பரிசோதகளர், இல்லது களுவாஞ்சிகுடி பொலிசாரைத் தொடர்பு கொண்டு பி.சி.ஆர்.பரிசோதனையை மேற்கொள்ளுமாறும் களுவாஞ்சிகுடி பொலிசாரினால் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். என களுவாஞ்சிகுடி பொலிசார் கிராமங்கள் தோறும் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













SHARE

Author: verified_user

0 Comments: