7 Nov 2020

பெரும்போக நெல் அறுவடையின் ஒருபகுதியை அரசிற்கு விற்பனை செய்யும் விவசாயிகளுக்கே 2021 சிறுபோக நிவாரண உரங்கள் வழங்கப்படும்.

SHARE

பெரும்போக நெல் அறுவடையின் ஒருபகுதியை அரசிற்கு விற்பனை செய்யும் விவசாயிகளுக்கே 2021 சிறுபோக நிவாரண உரங்கள் வழங்கப்படும்.
பெரும்போக நெற்செய்கையின் அறுவடையில் குறித்த ஒரு பகுதியினை அரச நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு விற்பனை செய்யும் விவசாயிகளுக்கே 2021 ஆம் ஆண்டிற்கான சிறுபோக நிவாரண உரங்கள் வழங்கப்படவேண்டுமென உரஉற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை  இராஜாங்க அமைச்சின் சுற்று நிருபம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் 2020-21 பெரும்போக நெற்செய்கையின்போது எவரேனும் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேயர் (2.5 ஏக்கர்) அல்லது அதற்கு அதிகமான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும்போது நெல் உரநிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் நிவாரண உரங்களை 300 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவுகளில் பெற்றுக் கொள்கின்ற விவசாயிகள் தாம் அறுவடை செய்யும் நெல்லில் ஆகக்குறைந்தது 1000 கிலோ அல்லது அதற்கு அதிகமான அளவை அல்லது விவசாயிகளின்விருப்பப்படி அதற்கதிகமான அளவு நெல்லை அரச நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு கட்டாயமாக வழங்க வேண்டும்.

அவ்வாறு நெல்லை வழங்கியமைக்கான பற்றுச் சீட்டை பெற்றுக் கொண்ட விவசாயிகளுக்கு மாத்திரமே 2021 சிறுபோகத்திற்கான நிவாரண உரங்கள் வழங்கப்படவேண்டுமென உரஉற்பத்தி மற்றும் வழங்கல்கள், இரசாயன உரங்கள் மற்றும் கிருமிநாசினி பாவனை ஒழுங்குறுத்துகை  இராஜாங்க அமைச்சின் இலவசமாக உரங்கள் பகிர்ந்தளிப்பது தொடர்பான சுற்றறிக்கைத் திருத்தம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜகன்நாத் தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப்பிரிவிற்கு தகவல் தெரிவத்துள்ளார்.








SHARE

Author: verified_user

0 Comments: