10 Nov 2020

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த 12 பேர் சிகிச்சைகளை நிறைவு செய்த பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு.

SHARE

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவந்த 12 பேர் சிகிச்சைகளை நிறைவு செய்த பின்னர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனையைச் சேர்ந்த 12 பேர் சிகிச்சைகளை நிறைவு செய்த பின்னர் செவ்வாய்கிழமை (10) நண்பகல் தமது வீடுகளுக்;கு திரும்பியதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 16 தினங்களுக்கு முன்னர் இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து இவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இவர்கள் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு காத்தான்குடி ஆதூர வைத்தியசாலையிலிருந்து தமது வீடுகளுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்னிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு கம்பஹாவைச் சேர்ந்த மேலும் 36 பேரும் சிகிச்சைகளை முடித்துக் கொண்டு தமது சொந்த இடங்களுக்கு செல்லவிருப்பதாகவும் அவர்களையும் அனுப்பி வைப்பதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.




SHARE

Author: verified_user

0 Comments: