11 Oct 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அதிகஸ்டப் பிரதேச பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு அருவி பெண்கள் வலையமைப்பினால் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அதிகஸ்டப் பிரதேச பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு  அருவி பெண்கள் வலையமைப்பினால் போக்குவரத்து வசதி  செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் அதிகஸ்டப் பிரதேசத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (11) நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதியினை அருவி பெண்கள் வலையமைப்பினால் ஞாயிற்றுக்கிழமை (11)  காலை செய்து கொடுத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கஸ்டப் பிரதேசத்தை உள்ளடக்கிய ஐந்து கல்வி வலயங்களில் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சுகாதார பாதுகாப்பு பொருட்களும் இவர்களால் வழங்கி வைக்கப்பட்டது

இதன்போது  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள கொத்தியாபுலை, பாவற்கொடிச்சேனை, கொல்லன்நுலை, குழுவினமடு, உன்னிச்சை 8ஆம் கட்டடை, 6ஆம் கட்டை, ஆயித்தியமலை, வேப்பவெட்டவான், இலுப்படிச்சேனை, மாவடிமுன்மாரி, பன்சேனை, அம்பிளாந்துறை, நாற்பதுவட்டை, விடுதிக்கல் 

மற்றும் கல்குடா கல்வி வலயத்திலுள்ள மதுரங்கேணிக்குளம்  போன்ற கிராமப் பிரதேசங்களிலிருந்து ஞாயிறன்று புலமைப் பரிசில் பரீட்சை எதிய மாணவர்களை பாதுகாப்பான முறையில் அழைத்துச் சென்று, பரீட்சை நிறைவடைந்ததும் மீண்டும் அவர்களது கிராமங்களுக்கு கொண்டு சேர்ப்பித்தனர். 

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின்போது மாணவர்கள் சுகாதார முறைப்படி முகக்கவசம் அணிந்து கைகளை சுத்தம் செய்து சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கமைவாக பரீட்சை மண்டபத்திற்குள் சென்று பரீட்சையினை எழுதியதை அவதானிக்க முடிந்தது. 

அத்துடன் பரீட்சை நடைபெறும் நிலையங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களும், பொலிஸ் உத்தியோகத்தர்களும் தமது கடமைகளை மேற்கொண்டதனை  காணமுடிந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின்  சுகாதார நடைமுறைகளுடன் கூடிய ஏற்பாடுகளை அருவி பெண்கள் வலையமைப்பு செய்துள்ளது என இவ் அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி  மயூரி ஜனன் தெரிவித்தார். 












SHARE

Author: verified_user

0 Comments: