12 Sept 2020

இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்மூன்று பேர் கைது.

SHARE

(பிரபு)

இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் பறிமுதல்மூன்று பேர் கைது.

மண்டபம் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்த முயன்ற ஆயிரம் கிலோ சமையல் மஞ்சள் மெரைன் போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாகன ஓட்டுநர் மற்றும் வேதாளை பகுதியை சேர்ந்த இருவர் உட்பட  3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு மிளகு, மஞ்சள் கடத்த உள்ளதாக ராமேஸ்வரம் மெரைன் காவல் ஆய்வாளர் கனகராஜ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், மண்டபம் மெரைன் காவல் நிலைய காவலர்கள்  வேதாளை கடற்கரை விரைந்தனர்.அப்போது குஞ்சார்வலசை பகுதியில் இருந்து வேதாளை நோக்கி கடற்கரை வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்துள்ளது. 

வாகனத்தை நிறுத்திய  மெரைன் போலீசார் ஓட்நரிடம் விசாரனை செய்ததில் ஓட்டுநர் முன்னுக்கு பின் முறனாக பதில் அளித்தால் சந்தேகம் அடைந்த மெரைன் போலீசார் வாகனத்தை சோதனை செய்ததில்3 4 மூடைகளில் சமையல் மஞ்சள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.  இது தொடர்பாக  சத்திய மங்களத்தை சேர்ந்த  வாகன ஓட்டுநா லோக வெங்கடேஷ் (33) மற்றும் வேதாளை பகுதியை சேர்ந்த ரியாஸ் (36), சகிபுல்ல (40)  ஆகிய 3 பேரையும் கைது செய்த மெரைன் போலீசார்;, 34 பண்டல்களில் இருந்த ஆயிரம் கிலோ மஞ்சள்களை பறிமுதல் செய்தனர். 

இது குறித்து மெரைன் ஆய்வாளர் கனகராஜ் கேட்ட போது, இலங்கைக்கு நறுமண பொருட்கள் கடத்தப்பட உள்ளதாக  கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மண்டபம் மெரைன்  போலீசார் வேதாளையில் ஆயிரம்  கிலோ மஞ்சளை பறிமுதல் செய்துள்ளனர். 

கொரோனா தொற்று தடுப்பு சிகிச்சையில் மஞ்சள் சிறந்த கிருமி நாசினியாக இலங்கையில் பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் கிலோ ரூ.95 க்கு விற்கப்படும் மஞ்சள், இலங்கையில் மஞ்சள் கிலோ ரூ.3,500க்கு விலை போகிறது.

இதையறிந்த கடத்தல் கும்பல் ஈரோட்டில் இருந்து  கிலோ கணக்கில் மஞ்சள் வாங்கி வந்து இருப்பு வைத்து கள்ளத்தோணியில் இலங்கைக்கு கடத்த முயன்ற போது சிக்கினர்.   மஞ்சளை கொடுத்து விட்டு அதன் தொகைக்கு நிகரான தங்கம் கடத்தி வர இக்கும்பல் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறினார்.





SHARE

Author: verified_user

0 Comments: