20 Sept 2020

வரலாற்று மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.

SHARE


வரலாற்று மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு.

மட்டக்;களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் வரலாற்று ஆய்வு தொடர்பாக செயற்பட்டு வரும் ஸ்ற்றோறிக்கா (STORICO)  அமைப்பினால் பட்டடிருப்பு வலயக் கல்வி வலயத்திற்குட்பட்டு, 2018, மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தர உயர்தரத்தில் வரலாற்றுப் பாடத்தில் சித்தி பெற்ற மாணவர்களையும், பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும், கௌரவிக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(20) களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஸ்ற்றோறிக்கா (STORICO)  அமைப்பின் வரலாற்று ஆசியரியர் தவலிங்கம் ஐங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் வரலாற்றுப்பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஸ் அவர்கள் இதன்போது பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களைக் கௌரவித்தார்.

இதன்போது, மாணவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, மாவர்கள் வரலாற்றுப்பாட ரீதியாக எதிர்கொள்ளும் சவால்கள், அவற்றை எவ்வாறு படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ளலாம், மேலும், வரலாற்றுப் பாடத்தைக் கற்பதனால் தமிழர்களினதும், மற்றும் ஏனைய வறலாற்றுச் சான்றுகளையும், எவ்வாறு எதிர்காலத்தில் ஆவணமாக்கலாம், இவற்றுக்கு சமூக ரீதியான ஒத்துழைப்புக்களை எவ்வாறு பெற்றுக் கொள்ளுதல் போன்ற விளக்கங்களும், மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன.


























SHARE

Author: verified_user

0 Comments: