12 Sept 2020

வான் மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம் நூல் அறிமுக விழா.

SHARE

வான் மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம் நூல் அறிமுக விழா.

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் வான் மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம் நூல் அறிமுக விழாவும் 17 வது மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பும் வெள்ளிக்கிழமை (11) இரவு காத்தான்குடி - 5, பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இடம் பெற்றது.

பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட பேராசிரியர்களான 

சுமேத வீரவர்த்தன, மு.அபூபக்கர் ஆகியோரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பசீர்சேவுதாவுத், அலிசாஹீர் மௌலானா மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி ஆகியோர் அதிதிகளாக கலந்து சிறப்பித்த நிகழ்வானது, அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டு, இறை வழிபாட்டுடன் நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

நிகழ்வின் முதல் நிகழ்வாக அஷ்ஷெய்க் மௌலவி.யு.அப்துர் ரஊப் அவர்களினால் 20 வருடங்களிற்கு மேலாக தொகுக்கப்பட்ட

ஸ_ன்னத் வல் ஜமாஅத் கொள்கை ஆதாரக் களஞ்சியம் எனும் பொருளடக்கத்துடன் 67 தலைப்பில் 1646 பக்கங்களைக் கொண்ட வான் மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம் நூல் அறிமுகம் இடம் பெற்று, அதிதிகளிற்கு முதல் நூல் நூலாசிரியரினால் வழங்கி வைக்கப்பட்டு குறித்த நூலானது வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 10 மௌலவிகளுக்கு

மௌலவீ பாஸில் றப்பானீ பட்டமளிப்பு இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.





















SHARE

Author: verified_user

0 Comments: