22 Sept 2020

உதவி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.

SHARE

உதவி ஆசிரியர்கள் நியமிப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை நடாத்தி வருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்ந்தும் நிலவி வருவதாகவும் அதனை நிவர்த்திக்கும் முகமாக பூர்வாங்க கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

இதேவேளை அதி கஸ்ட பிரதேசங்களில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் கடமையாற்றி வருவதாகவும் அவர்கள் தங்களுடைய வீடுகளுக்கு செல்வதற்காக இடமாற்றம் கேட்டு வருவதாகவும் அவர்களுக்கு மனிதாபிமான முறையில் இடமாற்றங்களை வழங்கி வருவதாகவும் இப்பிரதேசத்தில் பட்டதாரிகளின் உருவாக்கம் குறைவாக காணப்படுகின்றமை ஆசிரியர் பற்றாக்குறைவக்கு ஏதுவாக அமைவதாகவும் இதன்போது அவர் தெரிவித்தார்.
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதியில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு திங்கட்கிழமை (21) கோமரங்கடவல மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 220 மாணவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.
கிழக்கு மாகாண ஆளுநரின் விசேட ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றமை விசேட அம்சமாகும்.
அதேபோன்று இவ்வலயத்திலுள்ள தமிழ் முஸ்லிம் சிங்கள இனங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இதன்போது கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை உயர்த்தும் நோக்கில் இந்த செயற்பாடு கிழக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ. கே. ஜி. முத்துபண்டா, ஆளுநரின் செயலாளர் எல். பீ. மதநாயக்க, கோமரங்கடவல பிரதேச சபை தலைவர் சந்தன விஜிதகுமார, கோமரங்கடவல பிரதேச செயலாளர் எஸ். எம். சீ. சமரக்கோன் அரசியல் பிரமுகர்கள், அரசஅதிகாரிகள் என பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
District media unit
Trincomalee






SHARE

Author: verified_user

0 Comments: