16 Sept 2020

மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி.

SHARE

மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி.

மட்டக்களப்பு மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின்  உள்ளுர் உற்பத்திப் பொருட்களுக்கான பிரதேச மட்ட விற்பனைக் கண்காட்சி ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலக வளாகத்தில் புதன்கிழமை (16.09.2020) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்ளுர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய பிரதேச செயலாளர் என். வில்வரெட்ணம், அரசினால் முயற்சியாளர்களுக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் நியாயமான விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது அத்தோடு சிறுதொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறு தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளுக்கான தர நிர்ணயத்தை அதி உயர்ந்த மட்டத்தில் பேணி வாடிக்கையாளர்களை தம் வசம் ஈர்த்துக் கொள்ள வெண்டும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் உள்ளுர் வளங்களைக் கொண்டு இந்த உற்பத்திகள் அமைவதால் அவை உள்ளுர் வாடிக்கையாளர்கள் மத்தியில் இன்னும் வரவேற்பைப் பெறும்” என்றார்.

மாவட்ட சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி, சந்தைப்படுத்தல் விரிவாக்கல் பிரிவின் மேற்பார்வை உத்தியோகத்தர் சி. வினோத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  மேலும், பிரதேச செயலக உதவிச் செயலாளர் ஜி.பவதாரணி, திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் ஏ.கருணாகரன், நிருவாக உத்தியோகத்தர் என்.கோமதி, கணக்காளர் ஆர்.டிலானி உட்பட இன்னும் பல அதிகாரிகளும் சிறு தொழில் முயற்சியாளர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.










SHARE

Author: verified_user

0 Comments: