7 Aug 2020

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாதையை மாற்ற வேண்டும் - தமிழ் தேசியத்திற்காக எனக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - ஜனா

SHARE

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாதையை மாற்ற வேண்டும் - தமிழ் தேசியத்திற்காக எனக்கு வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றிகள் - ஜனா.

தமிழ் தேசிய்க கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருவர் இம்முறை நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றோம். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், எனக்கும் வாக்களித்த மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.


எனது வெற்றியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவும், நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்படக் கூடாது என்பதற்காகவும்,  பல சூழ்ச்சிகள், பலராலும் முன்னெடுக்கப்பட்டன அவற்றுள் வெளியிலிருந்தும் எமது கட்சிக்குள்ளிலிந்தும் பல எதிர்ப்புக்கள் இருந்தன. இந்த நிலையிலும் நானும் என்னுடன் இருந்த அனைவரும் ஒன்றியைந்து மிகவும் போராடித்தான் இந்த வெற்றியைப் பெற்றிருக்கின்றேம். மட்டக்களப்பு மக்கள் வித்தியாசமான ஒரு பாதையை விரும்புகின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தற்போது சென்று கொண்டிருக்கின் பாதையிலே ஒரு மாற்றம் வெண்டும் இதுசம்மந்தமாக தமிழ் தேசியக் கூட்டமை;பிபன் அங்கத்துவக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் கிடைத்த (தேசியப் பட்டடியல் உட்பட) 10 உறுப்பினர்களில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கின்றோம். (அதில் வன்னியிலே 2 உம், மட்டக்களப்பிலே ஒன்றும்) மிகவிரைவில் எமது கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) வின் அரசியல் குழு கூடி அரசியல் தொடர்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பிக் எதிர்காலம் தொடர்பிலும் தமிழ் மக்களின் தற்போதைய நிலமை தொடர்பிலும்,  ஆராய்ந்து அதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுவை புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னர் கூட்டி அதற்கான நடவடிக்கை நாங்கள் எடுக்கவேண்டும். 

என நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெற்றி பெற்றுள்ள கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (07) மட்டக்களப்பிலே அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….. 

தமிழ் மக்கள் கடந்த காலங்களில் புரையோடிப்போயுள்ள ஒரு தீர்வை வேண்டி நிற்கும் இந்த வேளையில் வித்தியாசமான முறையில் தமிழ் மக்கள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள் அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு சிறந்த தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்கவேண்டிய தேவை இருக்கின்றது. “கட்சிக்காகவா மக்கள், அல்லது மக்களுக்காகவா கட்சி” என்ற ரீதியில் நாங்கள் மக்களின் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் செயற்பட வேண்டிய தேவையும் இருக்கின்றது. அந்தவகையில் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) மிகவிரைவில் கூடி ஒரு தீர்மானத்தை எடுத்து  அதனை தமிழ் தேமசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் சமரப்பித்து அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையில் நாங்கள் இருக்கின்றோம். 

எதிர்காலத்தில் என்னைப் பொறுத்தவரையில் என்னில் மக்கள் நம்பிக்கை வைத்தும், நான் கடந்த காலங்களில் மக்களுக்குச் செய்த சேவையினை வைத்தும்தான் மட்டக்களப்பு மக்கள் என்கு இம்முறை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 26382 வாக்குகளை அளித்திருக்கின்றார்கள். அந்தவகையில் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும், உள்ளுர் பிரதேச அபிவிருத்திக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாதையைச் சீரமைப்பதற்கும் எனது பதவிக்காலத்தை நான் பயற்படுத்துவதற்கு நான் தயாராக இருக்கின்றேன். 

அம்பாறை மாவட்டத்திலே 1994 ஆம் ஆண்டும் இதே நிலமை நடந்தது. மாவை.சேனாதிராஜா யாழ்ப்பாணத்திலே இருந்து வந்து அம்பாறையிலே போட்டியிட்டிருந்தார். அப்போது தமிழ் பிரதிநிதிகள் எவரும் தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. அதுபோன்றதொரு நிலமை இம்முறையும் வந்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு தேசியக் பட்டியல் உறுப்பினர் கிடைத்திருக்கின்றது அதனை அம்பாறை மாவட்டத்திற்கு வழங்குவதற்கு நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுவிற்கு  ஆலோசனை வழங்குவோம். ஏனெனில் அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டவர்கள். குறிப்பாக வடக்கு கிழக்கிலே ஆயுத ரீதியாகவும், இன ரீதியாகவும், பல்வேறுபட்ட வகையில் அந்த மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். 

அம்பாறை மாட்டத்திலிருந்த பல தமிழ் கிராமங்கள் இல்லாமலாக்கப் பட்டிருக்கின்றன. அந்த நிலமை எதிர்காலத்தில் வரக்கூடாது என்பதை அறிந்து கூடுதலான கரிசனையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்பாறை மாவட்டத்தில் செலுத்த வேண்டும். நான் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் மனதில் குடியிருப்பவன் நான் அதுபோல் எனது மனதிலும் அம்பாறை மாவட்ட மக்கள் குடியிருக்கின்றார்கள். அந்த வகையில் எனது சேவையின் ஒருபகுதி நிட்சயமாக அம்பாறை மாவட்டதிற்குக் கிடைக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2015 பொதுத் தேர்தலிலும் பார்க்க இம்முறை பாரிய வாக்குச் சரிவைச் சந்தித்துள்ளது. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டதிலே 50 ஆயிரம் வாக்குகள் குறைவாகவே பெற்றுள்ளது. இதற்கான காரணங்களை நாங்கள் அலசி ஆராய வேண்டும். உரிமை மாத்திரமல்ல அபிவிருத்தியும் தேவை என்பதை விரும்புகின்றார்கள். அந்த அடிப்படியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களின் விருப்பதில் அக்கறை செலுத்த வெண்டும் என்பது எனது நிலைப்பாடாகும்.

மட்டக்களப்புத் தமிழர்கள் இம்முறை மொட்டுச் சின்னத்தில் தேர்தலில் களமிறங்கி ஒரு ஆசனத்தை வெற்றி பெற்றுள்ளார்கள், அதபோல் படகுச் சின்னத்திலும், களமிறங்கி ஒரு ஆசனத்தையும் வெற்றி பெற்றுள்ளார்கள். அந்த வகையில் மக்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட செற்பாட்டை விரும்பவில்லை. கூட்டமைப்பினர் நடந்து கொண்ட செயற்பாடுகள் மக்களுக்குப் பிடிக்கவில்லை என்பதுவும் இதன்மூலம் தெழிவாகத் தெரிகின்றது. அதனைத் திருத்திற் கொள்வதற்கும் எதிர்காலத்தில் இழந்த வாக்குக்களை மீளப் பெறுவதற்கும் நான் முயற்சிப்பேன்.

தற்போதைய நிலையில் குறிப்பாக சிங்கள மக்கள் தென்னிலங்கையில் பொதுஜன பெரமுனக் கட்சியை விரும்பகின்றார்கள் என்பதை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமு; தெரிகின்றது. அடுத்தது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்ட பெரிய பிறவு மக்கள் மத்தியில் ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதைத்தான் இந்த தேர்தலின் மூலம் மக்கள் அப்பகுதி மக்கள் எடுத்துக்கூறியிருக்கின்றார்கள்.

கடந்த முறையைவிட இம்முறை வாக்களிப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் தமிழ் தேசிக் கூட்டமைப்பை விட்டு ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள். இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாதையை மாற்றுவதற்கு தமிழ் மக்கள் விரும்பகின்றார்கள்  என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: