13 Aug 2020

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சாய ஆகிய வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்து ஆசீர்வாதம் பெற்றார். புதி

SHARE

புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி மற்றும் ருவன்வெலி மஹா சாய ஆகிய வழிபாட்டு தலங்களில் வழிபாடு செய்து ஆசீர்வாதம் பெற்றார்.புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றதை தொடர்ந்து அனுராதபுரம் ஸ்ரீ மஹா போதி, ருவன்வேலி சாய உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு விஜயம் செய்து வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.


இன்று (2020.08.13) முற்பகல் ஜெய ஸ்ரீ மஹா போதிக்கு விஜயம் செய்து வழிபாடு நடத்தி ஆசீ பெற்ற பிரதமர், தொடர்ந்து அட்டமஸ்தானதிபதி பேராசிரியர் சங்கைக்குரிய பல்லேகம சிறினிவாச தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதன்போது விசேட அனுசாசனம் நிகழ்த்திய அநுராதபுரம் வரலாற்று சிறப்புமிக்க லங்காராம விகாராதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரர், 2015ஆம் ஆண்டு மக்கள் இழைத்த தவறை பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொடுத்து இம்முறை தேர்தலில் அப்பிழையை சரிசெய்வதற்கு மக்களே நடவடிக்கை எடுத்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

மக்கள் தமது கடமையை நிறைவேற்றியது போன்று அரசாங்கம் மக்களுக்கான தமது கடமையைச் நிறைவேற்றுவதற்கான காலம் தற்போது எழுந்துள்ளதாகவும், நாட்டுக்கு சாதகமற்ற அரசியலமைப்பை மாற்றி புதிய அரசியலமைப்பின் மூலம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் அவர் கூறினார்.

தொலைதூர கிராமங்களில் உள்ள அப்பாவி மக்கள் இந்த நாடு, தேசம் மற்றும் மதத்தை பிரதமர் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையில் எப்போதுமே காணப்படுவதால் அந்த நம்பிக்கை எதிர்காலத்திலும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அனுராதபுரத்தில் உள்ள அடமஸ்தானத்திற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு, யாத்திரை மேற்கொள்ளும் இலட்சக்கணக்கான பக்தர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

தலைமைத்துவத்தை பொறுப்பேற்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜெய ஸ்ரீ மகா போதிக்கு விஜயம் செய்து ஆசீ பெறுவதற்கு மறக்கவில்லை என்பதை நினைவு கூர்ந்த கலாநிதி பல்லேகம ஹேமரதன தேரர் இது இந்நாட்டு யுக புருஷர்களின் அம்சமாகும் எனவும் குறிப்பிட்டார்.

பின்னர், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் ருவன்வெலி சாய தாதுகோபுரத்தை வழிபட்டு ஆசீர்வாதம் பெற்றார்.

தொடர்ந்து பிரதமர், நுவர கலாவிய தலைமை சங்கநாயக்கர் ருவன்வெலி சைத்யாராமாதிகாரி சங்கைக்குரிய பல்லேகம ஹேமரதன தேரரிடம் ஆசி பெற்று, பின்னர் மிரிஸவெட்டிய மஹா விகாரைக்கு விஜயம் செய்து மிரிஸவெட்டிய மஹா விகாராதிகாரி ஈதலவெடுனு வௌ ஞானதிலக தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றார்.

பின்னர் அனுராதபுரம் ஜெயந்தி மஹா விகாரைக்கு வருகை தந்த பிரதமர் ஜெயந்தி மஹா விகாரதிபதி, வட மற்றும் வடமத்திய இரு மாகாணங்களின் பிரதான சங்கநாயக்கர் கலாநிதி நுகேதென்ன பஞ்ஞானந்த தேரரை சந்தித்து ஆசீ பெற்றார்.

குறித்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர்களான எஸ்.எம்.சந்திரசேன, ஷெஹான் சேமசிங்க, துமிந்த திசாநாயக்க, சிறிபால கம்லத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: