31 Aug 2020

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் கிராம மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு.

SHARE

(சுதா)

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தினால் கிராம மட்ட அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுப்பு.
ஒவ்வெரு பிரதேச செயலக பிரிவுகளிலும் 12மில்லியன் ரூபா செலவில் கிழக்கு மாகாண கிராம  அபிவிருத்தி திணைக்களம் குறைபாடுடையதும் தனித்து விடப்பட்டதுமான கிராமங்களை அடிப்படையாகக் கொண்ட கிராமங்களின் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பாரிய வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளது.

இதற்கமைவாக தெரிவு செய்யப்பட்ட  மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட துறைநீலாவணை வடக்கு,வடக்கு1பிரிவுகளில் மக்களின் அடிப்படையான தேவைகளை நிறைவு செய்யும் நோக்கில் முன்னாயத்த கள ஆய்வுக் கலந்துரையாடல் நிகழ்வு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி காமினி இன்பராசா தலைமையில் இன்று முற்பகல் 10மணியளவில் துறைநீலாவணை கண்ணகி பாலர் பாடசாலைக் கட்டிடத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளர் ஜெ.சனஞ்சயன் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன் மற்றும் திருகோணமலை மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மட்டு மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ,திட்டத்திற்குப் பொறுப்பான பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,தொழினுட்ப உத்தியோகத்தர்கள்,கிராம மட்ட கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதி நிதிகள் ,மாதர் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதி நிதிகள் ,சமூர்த்தி உத்தியோகத்தர்கள்அபிவிருத்தி எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது  புனரமைக்கப்படாத வீதிகள் புனரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் பல்தேவைக் கட்டிடம் அமைத்தல் தொடர்பான விடயங்கள் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


SHARE

Author: verified_user

0 Comments: