18 Aug 2020

மட்டக்களப்பு சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி பேராலய கொடியேற்றம்.

SHARE

மட்டக்களப்பு சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி பேராலய கொடியேற்றம்.

வரலாற்று சிறப்புபெற்ற  மட்டக்களப்பு சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி பேராலய கொடியேற்ற மகோற்சவ பெருவிழா செவ்வாய்கிழமை (18) உற்சவகால தலைமை குருக்கள்  தலைமையில் இடம்பெற்றது.

ஆலயத்தில் கும்ப யாக பூஜை  இடம்பெற்று விநாயகர் அத்துடன் முருகப்பெருமானுக்கும்  விசேட அபிஷேகம் நடைபெற்றது.

அதன் பின்னர் திரைச்சீலை ஆலயத்தின் வன்னிமை தலைமையில் ஆலயத்தின் உள்வீதி வலம் வந்ததும் சுபவேளையில்  கொடியேற்றம் இடம்பெற்றது.

அதன்பின்னர் தம்ப பூஜை இடம்பெற்று முருகப்பெருமான் ஆலய உள் வீதி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நடைபெற்ற கொடியேற்ற திருவிழாவிற்கு ஆலயத்தின் வன்னிமை மற்றும் வண்ணக்குமார் உற்சவகாரர்கள்  உட்பட பக்தர்கள் அனைவரும் சுகாதார நடை முறையைக் கடைப்பிடித்து ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது ஈடுபட்டனர்.

சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் கொடியேற்றம் செவ்வாய்கிழமை (18) சுபவேளையில் இடம்பெற்று ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 02.09.2020 திகதி உதயமூலையில் அமைந்துள்ள பிரணவ தீர்த்த உற்சவத்துடன் ஆலயத்தின் மகோற்சவ பெருவிழா  நிறைவடைய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆலயத்தின் மகோற்சவ திருவிழா ஆரம்பமாகிய நிலையில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் வைரஸ் நோய் தாக்கம் காரணமாக உற்சவ காலங்களில் இடம்பெறும் அன்னதான சேவை சமூக இடைவெளி கடைப்பிடித்து வழிபாடுகளில் ஈடுபடல், ஆலய வழிபாட்டிற்காக  வருகின்ற  பக்தர்கள் ஆலயத்திற்குள் குறுகிய நேரத்தை வழிபாட்டுக்காக ஒதுக்கிக் கொள்ளல் ஆலய வழிபாடுகளுக்கு வருகின்றபோது சுகாதார நடைமுறையை கடைபிடித்து வருதல் போன்ற பல்வேறுபட்ட விடதானங்களை நடைமுறைப்படுத்தி வருமாறு ஆலய வன்னிமை மற்றும் வண்ணக்குமார் உற்சவ காலத்தில் நடந்து கொள்ளுமாறு ஆலயத்தில் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றார்கள்







SHARE

Author: verified_user

0 Comments: