23 Jul 2020

வல்லிபுரம் குணசேகரம் ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு.

SHARE
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பட்டிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த தேத்தாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் பயிற்றப்பட்ட கணித ஆசிரியராகக் கடமையாற்றியவரும் இலங்கை ஆசிரியர் சேவை தரம் 1 ஐச் சேர்ந்தவருமாகிய வல்லிபுரம் குணசேகரம் அவர்கள் ஆசிரியப் பணியில் 28 வருடங்கள் சிறந்த சேவையாற்றி 2020.07.21ஆம் திகதியாகிய இன்று தனது 60 வயதை பூர்த்தி செய்து தனது ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவர் மட்டக்கள்பு மாவட்டத்தின் மண்முனை தென்எருவில் பற்று பிரதேசத்திலே குருக்கள்மடம் கிராமாத்தைச் சேர்ந்தவர். கதிராமத்தம்பி வல்லிபுரம் முருகுப்பிள்ளை மங்கையற்கரசு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராக 1960.07.21ம் திகதியன்று பிறந்தார். ஆறுபேரைக் கொண்ட இவரது குடும்பத்தில் இவருக்கு 02 சகோதரிகளும் 01 சகோதரரும் உள்ளனர்.

மட்ஃபட்ஃமாங்காடு சரஸ்வதி மகா வித்தியாலய அதிபர் பாலசிங்கம் தவமணிதேவி அவர்களைத் கணவராவார். இவருக்கு 02 பெண் பிள்ளைகளும் 02 ஆண் பிள்ளைகளும் உள்ளனர்.

ஆசிரியராகச் சேவையாற்றிய பாடசாலைகள் (முதல் நியமனத் திகதி 1992.10.19)  (நுவரெலியா)
1992 - 1993 – மமா/நுவ/நானுஓயா தமிழ் மகா வித்தியாலயம், நானுஓயா
            (தற்போதைய நாவலர் த.ம.வி)        
1993 - 2003 – மமா/நுவ/யரவல் தமிழ் வித்தியாலயம், டயகம
2003 - 2006 – மட்/பட்/அம்பிளாந்துறை (கலைமகள் ம.வி) 
2006 - 2012 – மட்/பட்/பெரியபோரதீவு பாரதி வித்தியாலயம். 
2012 - 2014 - மட்/பட்/செட்டிபாளையம் ம.வி. 
2014 - 2018 - மட்/பட்/களுதாவளை ம.வி.
2018 - 2020 - மட்/பட்/தே;தாத்தீவு சிவகலை வித்தியாலயம். 

சமூக சேவை (வெளிமாவட்டம்)

மமா/நுவ/யரவல் தமிழ் வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிந்த காலத்தில் சந்திரிகாமம் தோட்டம் யரவல் டிவிசன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் செயலாளராகவும் பணிபுரிந்து ஆலயத்தினை மத்திய மகாண சபையிலும் கொழும்பு இந்து சமய கலாசார திணைக்களத்திலும் பதிவு செய்து தோட்ட மக்களின் நிதி மூலம் அவர்களது ஓத்துழைப்போடு இவ்வாலயத்தினை புனரமைப்பு செய்து மகா கும்பாபிஷேகம் நடாத்தி தோட்ட மக்களை ஆன்மீக வழியிலும் சிறந்து விளங்க செய்தார். 

மமா/நுவ/சந்திரிகாமம் தோட்டம் யரவல் டிவிசனில் மின்சாரக் குழு உறுப்பினராக இருந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபதலைவராக இருந்தவரும் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராகவும் இருந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் அவர்களின் மூலமாக இத்தோட்ட மக்களுக்கு மின்சாரத்தினையும்  பெற்றுக்கொடுத்தார்.

இக்காலப்பகுதியில் இவரது சமூக சேவையை பாராட்டி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்கள் அகில இலங்கை சமாதான நீதவான் பதவி வழங்கி கௌரவித்தார்.

மட்/பட்/குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் நிருவாகசபை உறுப்பினராகவும் செயலாளராகவும் பதவி வகித்து பாடசாலையினதும் மாணவர்களினதும் வளர்ச்சிக்கு அயராது உழைத்தமை. 

குறிப்பாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சுனாமிப் பேரலையின் பின்னரான காலப்பகுதியில் பாடசாலை அபிவிருத்தின் சங்கத்தின் செயலாளராக இவர் கடமையாற்றிய வேளையிலே இவ்வித்தியாலயத்திற்கென பிரதான வீதியில் புதிய கட்டிடத் தொகுதிகள் அமைக்கப்பட்டு தற்போது அழகாகக் காட்சி தருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

சிவநெறி மன்றம், ஆலய பரிபாலன சபைகளின் மூலமாக மக்கள் மத்தியில் ஆன்மீக வளர்ச்சியையும் நல்லொழுக்க நற்பண்புகளையும் பெற்றுக்கொடுத்தமை.

கிராம அபிவிருத்திச் சங்கம்இ சனசமூக நிலையத்தினூடாக கிராமத்தின் அடிப்படை தேவைகள் பௌதீக வளங்கள் போன்றவைகளையும் நிறைவு செய்வதற்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை அணுகி அவற்றைப் பெற்றுக் கொடுத்தமை.

சிவில் பாதுகாப்புக் குழுவினூடாக குடும்பங்களில் ஏற்படும் பிரச்சினைகள் சிறுவர் துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை பிரதேச பொலிஸ் உத்தியோகத்தர்களோடு இணைந்து தீர்த்து வைத்தமை.

சட்டவிரோதமான மதுபான விற்பனையை தடைசெய்தமை.

குடும்பங்களில் பிரச்சினைகளின்றி சுமூகமான உறவுகளை ஏற்படுத்தியமை.

குடும்பங்களில் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தியமை.

முகவர்களை அணுகாது எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்து தாமாகவே அதனை தீர்க்கும் ஆற்றலை மக்களிடம் வளர்த்தமை.

சமய, சமூக, கலை, கலாச்சார நிகழ்வுகளில் அனைவரும் கலந்து கொள்ளும் பழக்கத்தை உருவாக்கியமை.

புதவி நிலை

1. அகில இலங்கை சமாதான நீதிவான்
2. மண்முனை தென்எருவில் பற்று பிரதேச மத்தியஸ்த சபை உறுப்பினர்
3. ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலய சிவநெறி மன்றத்தின் தலைவர்
4. சிவில் பாதுகாப்புக்குழுத் தலைவர்.

பெற்ற பட்டங்கள்.

1. சாம ஸ்ரீ
2. தேச கீர்த்தி
3. தேச அபிமானிய

தொழில்நுட்பக் கல்வி.

1985 - வீட்டு மின்னிணைப்பு பயிற்சிநெறி – சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி
1986 - பட வரைஞருக்கான பயிற்சிநெறி -  சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரி.
முறைசாராக் கல்வி பகுதி நேரப் போதனாசிரியர்(வீட்டு மின்னிணைப்பு பயிற்சிநெறி)
1986 - 1988 - மட்/குருக்கள்மடம் கலைவாணி ம.வி
1989 – மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)
2006 – மட்/களுதாவளை ம.வி (தேசிய பாடசாலை
இப்பயிற்சி நெறியின் மூலம் அநேகமான வீட்டு மின்னிணைப்பாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.

SOSநிறுவன பகுதிநேர கணித ஆசிரியர்

2009 - 2013 குருக்கள்மடம் SOS நிறுவன கல்விக்கூடம்.



SHARE

Author: verified_user

0 Comments: