17 Jul 2020

தமிழ் மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களையும். மக்களையும் வைத்து பலர் அரசியலை நடாத்திக் கொண்டு வருகின்றனர் - விசாந்தன்.

SHARE
தமிழ் மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களையும். மக்களையும் வைத்து பலர் அரசியலை நடாத்திக் கொண்டு வருகின்றனர் - விசாந்தன்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களையும். மக்களையும் வைத்து பலர் அரசியலை நடாத்திக் கொண்டு வருகின்றனர். இழக்கப்பட்ட உயிர்களை வைத்து தமது சொகுசு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றவர்கள், தமிழர்களுக்கான இருப்பையோ, உரிமையையோ, யாரும் பெற்றுத் தருவதாக இல்லை. இந்நிலையில் ஏனையோர் நமது நிலங்களைச் சூறையாக வருகின்றார்கள் இதனைத் தடுப்பதற்கு இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும். 

என நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையத்தின் நிருவாக உறுப்பினர் கணேசமூர்த்தி விசாந்தன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு வெல்லாவெளியில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. 

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பெறுத்தவரையில் இழக்கப்பட்ட அபிவிருத்திகளையும், எமது தனித்துவத்தையும் மீட்டெடுப்பதற்காக நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரரிப்பதற்காக நாங்கள் செயற்படவுள்ளோம். எமது அமைப்பு இதுவரை காலமும் எதுவித அரசியல் சாயமும் இல்லாமல் சமூக சேவைகளை மேற்கொண்டு வந்தது. அதற்கு அரசியல் பலமும் இல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாககும். இந்நிலமையினைக் கருத்திற் கொண்டுதான் நாங்கள் மேற்கொள்ளும் சமூக சேவைக்கு அப்பால் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஆதரிப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் முதலமைச்சராக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி கடந்த 5 வருட காலத்தினுள் இல்லாமல் போயுள்ளது.  அக்காலத்தில் எமது தமிழ் மக்கள் இருப்பiயும், காணிகளையும் இழந்துள்ளார்கள். இதற்கு தமிழ் மக்கள் மத்தியில் சரியான தலைமைத்துவம் இன்மையே காரணமாகும். எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றிணையத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2000 இளைஞர்கள் ஒன்று சேர்ந்து செயற்பட்டு வருகின்றோம். எம்முடைன் ஏனைய இளைஞர்களும் ஒன்றிணைந்து செயற்பட்டு சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களை இம்முறை நாடாளுமன்றம் அனுப்பி தமிழர்களின் அபிவிருத்தியையும், இருப்பையும் வென்றெடுக்க வேண்டும். என்பதுவே எமது வேண்டுகோளாகும்.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்காக உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களையும். மக்களையும் வைத்து பலர் அரசியலை நடாத்திக் கொண்டு வருகின்றனர். இழக்கப்பட்ட உயிர்களை வைத்து தமது சொகுசு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றவர்கள், தமிழர்களுக்கான இருப்பையோ, உரிமையையோ, யாரும் பெற்றுத் தருவதாக இல்லை. இந்நிலையில் ஏனையோர் நமது நிலங்களைச் சூறையாக வருகின்றார்கள் இதனைத் தடுப்பதற்கு இளைஞர்கள் ஒன்றுபட வேண்டும்.   

எனது தந்;தை கடந்த போராட்டத்தில் உயிரிழந்தார் அந்த வலியைச் சுமந்தவர்களாக நாங்கள் தற்போது வாழ்ந்து வருகின்றோம். தமிழ் தேசியம் பேசுகின்றவர்கள் எமது தமிழினத்திற்காக எந்தவொரு உரிமையையும் பெற்றுத்தரவில்லை, எந்தவொரு அபிவிருத்தியும் கிடைக்கப்பெறவில்லை. எனவே உயிரிழந்தவர்களை வைத்து யாரும் மக்களின் வாக்குகளைத் திருடவேண்டாம். என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: