19 Jul 2020

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் "உதிரம் கொடுத்து உயிரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்தான நிகழ்வு

SHARE
(விஜய்)

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் "உதிரம் கொடுத்து உயிரை பாதுகாப்போம்" எனும் தொனிப்பொருளில் மாபெரும் இரத்தான நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில்  இடம்பெற்றது.மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2005 வருட மாணவர்களின் அனுசரணையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் காட்மண்ட் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(19)காலை 8.00 மணியளவில் பழைய மாணவர் சங்கத் தலைவர் எபநேசன் தர்ஷன் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பதிகாரி,டொக்டர் விவே ,தாதி உத்தியோகஸ்தர்கள்,மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் நவரெட்ணம் மௌலீசன்,உபதலைவர் எஸ்.கிரிதரராஜ்,பழைய மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005ஆம் வருட மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாமில் பலர் கலந்துகொண்டு இரத்ததானத்தை அன்பளிப்பு செய்தார்கள்.இவ் இரத்தான நிகழ்வானது பழைய மாணவர் சங்கத்தினால் தொடர்ச்சியாக 7ஆண்டுகளாக நடாத்தப்பட்டு வருகின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: