31 Jul 2020

கைவிலங்கிடப்பட்டிருப்பது பிள்ளையானா? கிழக்குத் தமிழர்களா? – அரஸ்.

SHARE
கைவிலங்கிடப்பட்டிருப்பது பிள்ளையானா? கிழக்குத் தமிழர்களா? – அரஸ்.
ஏமாற்றத்துடன்கூடிய அரசை மக்கள் விரும்புகின்றார்களா அல்லது மாற்றத்துடன்கூடிய ஒரு படகின் பயணத்தை மக்கள் விரும்புகின்றார்களான என்றதொரு கேள்வி அமைந்துள்ளது. அதபோன்று விலங்கிடப்பட்டது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமையா, அல்லது கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் மக்களா என்ற கேள்வியும் நம்முன் எழுந்து நிற்கின்றது. அந்த வகையில் கடந்த கால அனுபவங்களைக் கொண்டு தற்போது உருவாக்கப்பட்டு செயற்பாட்டிலுள்ள கட்சிதான் எமது தம்மிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியாகும். எனவே ஆளுமை மிக்க அடுத்த தலைமைத்துவத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது. நாம் மாற்று சமூகத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம் ஆனால் எமது சமூகமே எம்மை அடிமையாக்கி இருக்கின்றது.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் கே.அரசரெத்தினம் (கே.கேஅரஸ்) தெரிவித்துள்ளார் வியாழக்கிழமை (30) இரவு மட்டக்களப்பு களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

நான் ஒரு ஆசிரியர் தற்போது வேட்பாளராக உள்ளேன. தற்போது உணர்ந்துள்ளேன் நான் ஒரு வெற்றி வேட்பாளராக வெற்றிக் குழுவில் இணைந்துள்ளேன் என்பதை உணர்கின்றேன். இந்த தேர்தல் மூலம் நாம் சாதிக்கப் பிறந்தவர்கள் என்பதை நாடம் நிரூபிப்போம். எனவே எமது மக்கள் அனைவரும் கடந்து வந்த ஏமாற்று விடையங்களை மறந்துவிட்டு,  வெற்றிக்கான பயணத்தில் பயணிப்பதற்குத் தயாராக இருங்கள். 

தமிழ் மக்கய் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருக்கு எப்போது கை விலங்கிடப்பட்டதோ அப்போதிருந்தே கிழக்கு மாகாணம் ஒரு மந்த கதியில் இருந்து கொண்டிருக்கின்றது. இதனால் எமது மக்களும், சூழலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கைவிலங்கிடப்பட்டுது பிள்ளையானா, அல்லது கிழக்குமாகாண தமிழர்களா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். அவ்வாறு பார்த்தால் கைவிலங்கிடப்பட்டிருப்பது நாமே. என அவர் இதன்போது தெரிவித்தார்.



SHARE

Author: verified_user

0 Comments: