31 Jul 2020

2020 ஆம் ஆண்டில் 3 புலிகள் ஆயுதமில்லாமல் நாடாளுமன்றம் செல்லப்போகின்றார்கள் - ஜெயவாணிதாசன்.

SHARE
2020 ஆம் ஆண்டில் 3 புலிகள் ஆயுதமில்லாமல் நாடாளுமன்றம் செல்லப்போகின்றார்கள் - ஜெயவாணிதாசன்.
இலங்கை சுதந்திரமடைந்தைத்திலிருந்து தமிழர்களின் தலைமைத்துவத்தை பிற மாகாணத்திற்குத்தான் வழங்கி வந்திருந்தோம். ஆனால் கடந்த 2008 ஆம் ஆண்டிலிருந்து சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை மிகவும் தூர நோக்கு சிந்தனையுடன் நிறுவியுள்ளார். இதன் காணரத்தினால் 2020 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து 3 புலிகள் ஆயுதம் இல்லாமல் இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஆயுதம் இல்லாமல் செல்லப்போகின்றார்கள். 

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் க.ஜெயவாணிதாசன் தெரிவித்துள்ளார் வியாழக்கிழமை (30) இரவு மட்டக்களப்பு களுதாவளையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

அனைவரும் நினைத்தார்கள் புலிகள் இல்லை என்று ஆனால் எமது கட்சியின் பெயரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்பதாகும். அதிலிருந்து 3 புலிகள் அரசியல் பணிக்காக நாடாளுமன்றத்திற்குச் செல்லப்போகின்றார்கள். 

எவரும் எம்மிடம் வாலாட்ட முடியாது இலங்கை சட்டத்திற்குட்பட்டுத்தான் நாங்கள் இந்த விடையங்களைச் செய்து கொண்டிருக்கின்றோம். இன்னும் இன்னும் எமது மக்களை அடிமையாக்க எவருக்கும் அருகதை கொடுக்கமாட்டோம். மட்டக்களப்பான ஒரு மானமுள்ள வீரம், அரசியலுக்குள் வருபவர்களுக்கு பயம் இருக்கக்கூடாது. ஆனால் சிலர் அரசியலுக்கு வருகின்றார்கள் ஆனால் அவர்களுக்கு மேடைகளில் பேசுவதற்கு பயப்படுகின்றார்கள். ஒரு இனத்திற்காக தலைமை தாங்கக் கூடியவர் அந்த அனத்திற்காக தன்னுயிரையும் தியாகம் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். எனவே எமது மட்டக்களப்பை மட்டக்களப்பானே ஆளவேண்டும் என்பதை நினைத்துதான் எமது கட்சி இந்த தேர்தல் களத்தில் நிற்கின்றது. 

நாங்கள் நாடாளுமன்றம் சென்றதும் எமது மக்களுக்குரிய நூறுவீதம் பாதுகாப்பை வழங்குவோம். எமது மண்ணைப் பாதுகாப்போம், பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவோம், வேலையற்றவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம், மாற்றானின் ஆதிக்கத்தைத் தடுப்போம், ஒட்டுமொத்த அரசியல் அதிகாரத்தை, கையிலெடுத்து எமது மக்களை வளப்படுத்துவோம். 

எனது கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனை நான் ஒரு முறை சந்தித்தேன் அப்போது அவர் என்னிடம் கூறியதாவது… எனது உயிர்போனாலும் பரவாயில்லை இக்கட்சியையும், எமது மக்களையும் காப்பாற்ற வேண்டும். என அவர் தெரிவித்தார். அதனால்தான் இக்கட்சியில் நானும் சேர்ந்த பயணிக்கின்றேன். 2020 ஆம் ஆண்டில் சிறைச்சாலைக்குள்ளிருந்து எமது தலைவர் வெளியே வரப்போகின்றார். என அவர் இதன்போது தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: