19 Jun 2020

மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் வயல் அறுவடை நோய் தாக்கம் இல்லாமல் கூடிய விளைச்சலை பெறவேண்டும் என இயற்கை தெய்வத்திடம் வேண்டி பொங்கல் வைப்பு.

SHARE
மட்டக்களப்பு   மண்முனை மேற்கு பிரதேசத்தில் வயல் அறுவடை  நோய் தாக்கம் இல்லாமல்   கூடிய விளைச்சலை பெறவேண்டும் என இயற்கை தெய்வத்திடம் வேண்டி பொங்கல் வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் தற்போது சிறுபோக வயல் அறுவடை இன்னும் ஓரிரு வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் விவசாயிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (19) பகல் நடைபெற்றது.

தமது வயல் விளை நிலங்களுக்கு நோய்தாக்கம்  மற்றும் இயற்கையினால் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படாமல் கூடிய விளைச்சலை பெறவேண்டும் என இயற்கை தெய்வத்திடம் வேண்டிக்கொண்டு இவ் விவசாயிகள் இந்த பொங்கல் பொங்கி வழிபாட்டினை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு கரவெட்டி கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட கரவெட்டி மற்றும் விளாமுனை  கிராம விவசாயிகளால்  ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா,விளாமுனை பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.

இதற்போது விளாமுனை பிள்ளையாருக்கு விஷேட பூசைகள் இடம்பெற்றதுடன் இயற்கை தெய்வங்களுக்கும் நன்றி செலுத்தி வழிபாட்டினை மேற்கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: