20 Jun 2020

பிரதமருக்கு ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தவருக்கு நேரடியாக அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க சந்தர்ப்பம்.

SHARE
(பிரதமரின் ஊடகப்பிரிவு) 


பிரதமருக்கு ஐயாயிரம் ரூபாயை அனுப்பி வைத்தவருக்கு நேரடியாக அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க சந்தர்ப்பம். 
மெதிரிகிரியவைச் சேர்ந்த முன்னாள் கிராம சங்க உறுப்பினர் எஸ்.பி.ஹேவாஹெட்ட (வயது – 86) அண்மையில் அலரி மாளிகைக்கு ஐயாயிரம் ரூபாய் பணத்தாள் சகிதம் கடிதமொன்றை அனுப்பி வைத்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கைகளுக்கு கிடைக்கும் வகையில் குறித்த பணமும் கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதனை ஹேவாஹெட்ட அவர்கள், இன்று (20.06.2020) முற்பகல் தமது கைகளினாலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தார்.


ஒரு மூத்த குடிமகனாக சமூக பொறுப்பை ஏற்று குறித்த பணத்தை அனுப்பி வைத்த திரு.ஹேவாஹெட்டவின் தாராள மனப்பான்மையை கௌரவிக்க வேண்டுமென கருதிய பிரதமர் அவர்கள், ஹேவாஹெட்டவின் கைகளினாலேயே அதனை ஜனாதிபதியிடம் கையளிக்க ஏற்பாடு செய்யுமாறு பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பிறந்த நாளான இன்று மிரிசவெட்டிய புனித பூமியில் இடம் பெற்ற தானம் வழங்கும் நிகழ்வின் போது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில், ஹேவாஹெட்ட அவர்கள் குறித்த நிதியை கொவிட்-19 நிதியத்திற்காக ஜனாதிபதியிடம் கையளித்தார்.

இதன்போது, ஹேவாஹெட்ட அவர்களின் குடும்பத்தாரும் உடனிருந்தனர்.



SHARE

Author: verified_user

0 Comments: