4 Jun 2020

மட்டக்களப்பில் பசுமை இல்லம் உதயம் - வீட்டுத் தோட்டங்களுக்குரிய பொருட்கள் வழங்கி வைப்பு.

SHARE
மட்டக்களப்பில் பசுமை இல்லம் உதயம் - வீட்டுத் தோட்டங்களுக்குரிய பொருட்கள் வழங்கி வைப்பு.
பிரான்ஸ் நாட்டை மையமாகக் கொண்டு புலம் பெயர் மக்களின் ஆதரவுடன், இயங்கும் பசுமை இல்லம், தற்போது வடக்கு கிழக்கிலும் வீட்டுத் தோட்டத்திற்குரிய உதவிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

கொவிட்  -19  எனும் வைரஸ் தாக்கத்தினால் கொரோனா நோய் பரவி வருகின்ற இந்நிலையில் பொருளாதார ரீதியிலும், வாழ்வாதார ரீதியிலும் மக்கள் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொண்டுள்ளனர். 

இவற்றுக்குத் தாக்குப்பிடிக்கும் முகமாக மட்டக்களப்பில் புதிதாக “பசுiமை இல்லம்” எனும் அமைப்பு ஒன்று உருவாக்கம் பெற்று “பசுமை வளர்ப்போம், வறுமை ஒழிப்போம்” எனும் தொணிப் பொருளின் கீழ் பொதுமக்களுக்கு வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வதற்கு உரிய பயிர் கன்றுகள், பயிர் விதைகள்,  அவற்றுக்குரிய உர வகைகளையும், நடுவதற்கான பைகள், கைநூல்கள்,  போன்றவற்றை இலவசமாக வழங்கியுள்ளதாக பசுமை இல்லம் அமைப்பின் இணைப்பாளர் ப.கோணேஸ்பரன் தெரிவித்தார். இந்நிகழ்வு புதன்கிழமை (03) மாலை மண்டூர் கணேசபுரம் கிராமத்தில் அமைந்துள்ள கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் இடம்பெற்றது.

முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு இவ்வாறு வீட்டுத் தோட்டங்களுக்குரிய பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. 

கணேசபுரம், தம்பலவத்தை, பாலமுனை, ஆகிய கிராமங்களின், கிரம சேவை உத்தியோகஸ்த்தர்கள், அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர்கள். பயனாளிகள், பசுமை இல்லத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

இவ்வாறு வடக்கு கிழக்கிலுள்ள ஒவ்வாறு கிராமங்கள் தோறும் இவ்வாறு இலவசமாக வீட்டுத் தோட்டங்களுக்குரிய உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக பசுமை இல்லத்தின் அமைப்பின் இணைப்பாளர் ப.கோணேஸ்பரன் மேலும் தெரிவித்தார்.


















SHARE

Author: verified_user

0 Comments: