11 May 2020

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் திருகோணமலைக்கு மாற்றப்படாது என கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி

SHARE
(உதயா)

கிழக்கு மாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் திருகோணமலைக்கு மாற்றப்படாது என கிழக்கு மாகாண ஆளுநர் உறுதி.
2010 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்குமாகாண முதலமைச்சராக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் இருந்தபோது அவரது முயற்சியினால் முன்பள்ளி ஆசிரியர்களுக்காக கிழக்குமாகாண பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் கிழக்கு மாகாண சபையினால் உருவாக்கியிருந்தார்.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கு மட்டக்களப்பு மாவட்டம் மத்திய பிரதேசமாக காணப்படுவதால் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து சேவைகளை வழங்குவதற்காக சி. சந்திரகாந்தன் அவர்களின் முயற்சியினால் 2012ஆம் ஆண்டு மட்டக்களப்புக்கு தவிசாளர் பொன்.செல்வநாயகம் அவர்களின் காலத்தில் மாற்றப்பட்டதாகவும் அதன்பின் வந்த தவிசாளர்களின் காலத்திலும் மட்டக்களப்பில் இயங்கி வந்ததாகவும் தற்போது இதனை திருகோணமலை மாவட்டத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்ததால், இவ்விடயத்தினை சி.சந்திரகாந்தன் அவர்கள் ஆராயுமாறு பணித்ததற்கமைய கிழக்கு மாகாண ஆளுநருக்கு இவ்விடயத்தினை கொண்டு சென்றிருந்தோம்.

இன்று ஆளுநருடன் தொலைபேசியில் கலந்துரையாடியதற்கமைய கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப் பணியகம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலைக்கு இடமாற்றப்படாது என கிழக்கு மாகாண ஆளுநர்  உறுதியளித்ததாக தமிழ் மக்கள்  விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன் ஊடகங்களுக்கு இன்று தெரிவித்தார்
SHARE

Author: verified_user

0 Comments: