18 May 2020

மட்டக்களப்பு - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கிவைக்கப்பட்டது.

SHARE
மட்டக்களப்பு  - மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவு  வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேசத்தில் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரண்டாம் கட்ட 5000 ரூபா கொடுப்பனவு திங்ககட்கிழமை (18) வழங்கிவைக்கப்பட்டது.


ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக நாடுபூராவும் இந்த இரண்டாம் கட்ட கொடுப்பனவு வழங்கும் திட்டம்  தற்போது  ஆரம்பமாகியுள்ளது.

இக்கொடுப்பனவின் ஆரம்ப நிகழ்வு  மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள மகிழவட்டவான் கிராமத்தில் திங்கட்கிழi  இடம்பெற்றது.

இதன்போது மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரசே செயலாளர் சுபா.சதாகரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கலைச்செல்வி வாமதேவா, முகாமைத்துவப் பணிப்பாளர் க.தங்கத்துரை, வங்கி முகாமையாளர் அசோக்குமார் பிரியதர்சினி மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் என பலர் கலந்துகொண்டனர்.

மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் கரவெட்டி வங்கி மற்றும் புதுமண்டபத்தடி வங்கி ஊடாக இரண்டாம் கட்டத்திற்கென 10206 குடும்பங்கள் 5000 ரூபா பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்போது சமுர்த்தி பயன்பெறும் குடும்பங்கள், பயன்பெற காத்திருப்போர் பட்டியலில் உள்ளோர் மற்றும் தொழில் பாதிக்கப்பட்டோர்  போன்றோர் இந்த நிவாரணத் தொகையை பெறவுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: