6 May 2020

நீர் வினியோக விசேட கூட்டம்.

SHARE
நீர் வினியோக விசேட கூட்டம்.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட  புழுக்குநாவிக் குளத்தை நம்பி வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தற்போது குழுக்குநாவிக் குளத்தில் நீர் மட்டம் வெகுவாக குறைவடந்துள்ளதனால் பாரிய நீர்ப்பிரச்சனைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். 

இதனால் அவர்களது நெல்வயல்க்ள கருகிக் கொண்டு செல்கின்றன. இவ்விடையம் குறித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவின் கவனத்திற்கு அப்பகுதி விவசாயிகளும், பிரதேச செயலாளரும் கொண்டு வந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபருடன் கலந்துரையாடி அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள சேனநாயக்கா சமுத்திரத்திலிருந்து நீரை நவகிரிக் குளத்திற்குக் கொண்டு வந்து அதிலிருந்து பட்டிப்பளைப் பிரதேச விவசாயிகளுக்கு வழங்குவதற்குதிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடையத்தை பட்டிப்பளை, மற்றும் நவகிரிப் பிரிவு விவசாயிகளுக்கும் எடுத்துரைக்கும் விசேட கூட்டம் செவ்வாய்க்கிழமை (05) போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் வெல்லாவெளியில் அமைந்துள்ள கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் திருமதி.தி.தட்சணகௌரி புழுக்குநாவித் திட்டதின் நீர்த்தட்டுப்பாடுகள் பற்றியும்,  கிழக்குமாகாண பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் வி.இராஜகோபாலசிங்கம் இவ்விசேட கூட்டத்தின் நோக்கம் பற்றியும், புழுக்குநாவித் திட்டத்தில் நீர்த்தட்டுப்பாடு தொடர்பாக அரசாங்க அதிபரினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் ஆலோசனைகள் தொடர்பிலும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜாவும், பகுக்குநாவி – நவகிரி நீர்ப்பாசனப் பொறிகுறை தொடர்பில் நவகிரிப் பிரிவு நீர்ப்பாசனப் பொறியியலாளர் மு.பத்மதாசனும், நவகிரித்திட்ட விவசாயிகளுக்கு நீர் வினியோகம் தொடர்பான உறுதிமொழியையும், விளக்கவுரையையும் மத்திய நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம்.அஸாரும், எதிர்காலத்தில் இவ்வாறான இடர்பாடுகள் வராமல் தடுப்பது தொடர்பான உறுதிமொழியை பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுகாகரனும், விவசாயிகளுக்கு இதன்போது விளங்கங்களை வழங்கினர்.

மேலும் இதன்போது பொறியியலாளர்கள. உயரதிகாரிகள் விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமது வாழ்வாதாரத்தினைக் கருத்தில் கொண்டு நீரின்றி கொழுத்தும் வெயிலில் கருகிச் செல்லும் வேளாய்மைச் செய்கைக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து நீரைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுத்த மட்டக்களப்பு மவாட்ட அரசாங்க அதிபருக்கு இதன்போது புழுக்குநாவிக்குள் விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.













SHARE

Author: verified_user

0 Comments: