18 May 2020

களுவாஞ்சிகுடியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இணைந்து மேற்கொண்ட திடீர் சுகாதர பரிசோதனை நடவடிக்கை.

SHARE
களுவாஞ்சிகுடியில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், பொலிசார், இணைந்து மேற்கொண்ட திடீர் சுகாதர பரிசோதனை நடவடிக்கை.
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொதுச் சுகாதார வைத்தியர் பிரிவுக்குபட்பட்ட களுவாஞ்சிகுடி நகரில் அமைந்துள்ள உணவகங்கள், பழக்கடைகள், மற்றும் விற்பனை நிலையங்ககளுக்கு திடீர் பரிசோதனை நடவடிக்கை ஒன்றை களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதார உத்தியோகஸ்த்தர்களும், களுவாஞ்சிகுடி பொலிசாரும் திங்கட்கிழமை (18) மேற்கொண்டிருந்தனர்.

சுகாதாரத்திற்குக் கேடான முறையில் உணவுப் பொருட்களை வைத்திருந்த வர்த்தர்கள் எச்சரிக்கப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனைகளும். அறிவுறுத்தல்களும் இதன்போது வழங்கப்பட்டன. 

மேலும், கடைகளில் மக்களுக்கு விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டு அவை அழிக்கப்பட்டதாகவும், குறிப்பிட்ட இவ்வாறு பாவனைக்குதவாத பொருட்களை வைத்திருந்த கடை உரிமையாளர்ளை அவர்களின் வர்த்தக நிலையங்களை சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்றாற்போல் திருத்தம் செய்யுமாறு அற்குரிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும், பொதுச் சுகாதார பரிசோதகர் கே.இளங்கோளவன் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதர பரிசோதகர் கே.இளங்கோவன் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இப்பரிசோதனை நடவடிக்கiளின்போது செட்டிபாளையம் பொதுச்சுகாதர பரிசோதகர் எஸ்.சிவசுதன், மற்றும் களுவாஞ்சிகுடி பொலிசார் உள்ளிட்ட பலரும் இதன்போது இணைந்து செயற்பட்டனர். 























SHARE

Author: verified_user

0 Comments: