3 May 2020

கட்டுரை : மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டுபிடிப்பு. கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

SHARE
(சக்தி) 
கட்டுரை : மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவு சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையங்கள் கண்டுபிடிப்பு. கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.


“கையறியாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறியாமை கொளல்.”

விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.

“உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டா தார்”

கள்ளை உண்ணக் கூடாது, சான்றோரால் நன்கு எண்ணப்படுவதை விரும்பாதவர் கள்ளை உண்ண வேண்டுமானால் உண்ணலாம்.

என வள்ளுவப் பெருந்தகை அப்போது எழுத்தில் பொறித்துள்ளார். எனினும் “குடி குடியைக் கெடுக்கும்” என முது மொழியும் உண்டு.

பொதுவாக ஆன்றோர்களினதும், சான்றோர்களினதும், முதுமொழிகளுக்கிணங்க மதுபானங்கள் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கின்றன எனவும், மதுபானங்களை அருந்துவதனால் சமூக அந்தஸ்த்து, என்பனவும், குறைந்து கொண்டே செல்கின்றன. இவற்றினைவிட நான்மறைகளும், மதுபானகளை அருந்துவதை அனுமதிக்கவில்லை. என்பதும் அனைரும் அறிந்த விடையமாகும்.

இது ஒரு புறமிருக்க இலங்கையில் மாத்திரமல்லாது தற்போது உலக நாடுகளையே ஆக்கிரமித்துள்ள கொவிட் - 19 எனப்படும் கொரோனா எனும் புதியவகை வைரஸ் நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் சுமார் ஒரு மாதகாலம் மட்டக்களப்பு மாவட்டமும் முற்றாக பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் அடக்கப்பட்டிருந்தது. 

அக்காலப்படுதியில் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், வர்த்தக நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் காரியலயங்கள், வர்த்தக நிலையங்கள், மதுபான சலைகளும், மூடப்பட்டிருந்தன. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மதுப்பிரியர்கள், வியாபார நோக்கத்திற்காகவும், சட்டரீதியற்ற முறையில் கசிப்பு உற்பத்திகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் மதுபாவனையாளர்கள், அதிக விலை கொடுத்து கசிப்பினைக் கொள்வனவு செய்யவும், சிறிய வயதினரும் மதுப்பழக்கத்திற்குட்படுவதற்குரிய தூண்டுதல்களை ஏற்படவும் வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன.

மேலும் மதுபான சாலைகளில் விற்பனை செய்யப்படும் மதுசாரப் போத்தல்களும், மதுபான சலைகளில் விற்பனை செய்யும் விலைக்கு மேலாக மூன்று மடங்கு அதிகமாக சில இடங்களில் களவாக விற்பனை செய்யப்பட்டன.

இவ்வாறு சட்டரீதியற்ற முறையிலும், பொறுப்பற்ற வித்தில் மக்கள் குறிப்பாக மதுப்பிரியர்களாக இருக்கின்றவர்கள், செயற்படும்போது தமது எதிர்கால இளம் சந்ததியினரும் பாதிப்பதற்கு தாமும் வழிசமைத்துக் கொடுக்கின்றோம் என்பதை மறந்து செயற்படுகின்றார்கள். மதுபான சலைகளில் மதுப்போத்தல்களை கொள்வனவு செய்தாலும், அவற்றை வீதி ஓரங்களிலும், மர நிழல்களிலும், வைத்து பாவித்து விட்டு வெற்றுப்போத்தல்களை அவ்விடத்திலேயே விட்டு விட்டுச் செல்;வதையும் நாம் நேரில் அவதானிக்க முடிகின்றது. 

மட்டக்களப்பு வவுணதீவில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை.

இது இவ்வாறு இருக்க  மட்டக்களப்பு   வவுணதீவு பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு இதன்போது 15 கோடா , கசிப்பு பரல்கள் மீட்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு  - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள  பன்சேனை, நெடுஞ்சேனைபகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் போன்ற  வவுணதீவு பொலிசாரால் கடந்த 10.04.2020 அன்று இரவு மேற்கொணட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த 15 பரல்கள் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைந்த இரகசிய தகவலுக்கமைவாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி, உதவி பொலிஸ் பரிசோதகர் சஜித் போன்றோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது மேற்படி சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கசிப்பு, கோடா, பரல்களை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி  11.04.2020 அன்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.  

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் காட்டுக்குள் தப்பியோடி விட்டதாகவும், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி  தெரிவிக்கின்றார்.


போரதீவுப்பற்று வம்மியடியூற்றில் கசிப்புக்கான கோடா கொள்கலன்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட வம்மியடியூற்று கிராமத்தில் காணி ஒன்றினுள் கசிப்பு உற்பத்திக்கான கோடா கொள்கலன்கள் கிராம சேவையாளர்களால் கடந்த 14.04.2020 அன்று மீட்கப்பட்டுள்ளது.

கிராம மக்களிடம் இருந்து வம்மியடியூற்று கிராம சேவகர் அ.சிறிநாதனிற்கு  கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் உடனடியாக விரைந்து செயற்பட்டு குறித்த காணியினுள் கசிப்பு உற்பத்தி செய்வதற்கான கோடா கொள்கலன்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கிராம சேவையாளர்களான அ.சிறிநாதன் மற்றும் திக்கோடை கிராம சேவையாளரான தி.தியதீஸ்வரன் ஆகியோரால் மீட்கப்பட்டன. பின்னர் வெல்லாவெளி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொருட்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கான  மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொக்கட்டிச்சோலையில் கசிப்பு நிலையம் முற்றுகை.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை களப்பு பகுதியில் கடந்த 20.04.2020 கசிப்பு நிலையம் ஒன்று முற்றுகை இடப்பட்டுள்ளது.

இதன்போது,  6 வரல்களில் கசிப்பு உற்பத்திக்கான 1000 லீற்றருக்கு மேற்பட்ட கோடா  கைபற்றப்பட்டுள்ளன. இளைஞர்களின் உதவியோடு அப்பகுதியின் கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், அண்மைய கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் களப்பில் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலே இப்பெரும் தொகையான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. கிராமங்களில் உள்ள இளைஞர்கள்,  சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த  ஒத்துழைக்கின்றமை முன்மாதிரியான செயற்பாடாகும். இது போன்று ஏனைய இளைஞர்களும் முன்வருகின்ற போது சட்டவிரோத செயற்பாடுகளை இலகுவாக கட்டுப்படுத்த முடியுமெனவும் சமூக செயற்பட்டாளர்கள் குறிப்பிட்டனர்.

முதலைக்குடாவில் கசிப்பு நிலையம் முற்றுகை

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதலைக்குடா ஆற்றினை அண்டிய களப்பு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று வெள்ளிக்கிழமை (24.04.2020) முற்றுகை செய்யப்பட்டுள்ளது.

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையில், முதலைக்குடா கிராம அமைப்புக்கள், கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் இணைந்து இந்நிலையத்தினை முற்றுகையிட்டு, கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் கோடா போன்றவற்றினை கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, கோடா, கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் வறல், சிலிண்டர், கொள்கலன், அடுப்பு போன்ற உபகரணங்களையும் கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் அண்மைக்காலங்களாக முற்றுகையிடப்பட்டு வருகின்றன. இதன்போது பெருமளவிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

திக்கோடையில் கசிப்பு கொள்கலன் கண்டு பிடிப்பு.


சனிக்கிழமை (25) திக்கோடை கிராமத்தில் கசிப்பு விற்பனை தொடர்பாக தகவலறிந்த கிராம உத்தியோகஸ்த்தரடங்கிய குழு தேடுதல் நடத்திய போது கசிப்புடன் கொள்கலன் ஒன்று மண்ணுக்குள் புதை;து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டு பிடித்துள்ளனர்.

வம்மியடியூற்று கிராமத்தில் பிடிபட்ட கசிப்பு கலன்கள்.

வம்மியடியூற்று கிராமத்தில் கசிப்பு உற்பத்தி இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து, கிராம சேவை உத்தியோகஸ்த்தரடங்கிய குழு தேடுதல் நடத்தியபோது சனிக்கிழமை (25.04.2020) மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கசிப்பு கலன்கலன்களைக் கைப்பற்றியுள்ளனர்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் மதுபான விற்பனை நிலையங்கள் பூட்டப்பட்டுள்ள நிலையிலும், கசிப்பு உற்பத்தி அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், இவ்வாறான உற்பத்தி நிலையங்களை முற்றாக ஒழிப்பதற்கான நடவடிக்கைகளையும் அனைத்து தரப்பினரும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கோவிட் - 19 எனப்படும் தற்போது உருவெடுத்து உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்ற புதியவகை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது மட்டக்களப்பின் பல இடங்களில் இவ்வாறு கசிப்பு உற்பத்தி சட்ட விரோத செயற்பாடு அதிகரித்து கொண்டு செல்கின்றன.

களப்பு மற்றும் நீர் நிலைகளை அண்டிய பகுதிகளிலே அதிகளவான உற்பத்தி நிலையங்களே மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிபடுகின்றன.

இச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 20.04.2020 அன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்த மதுப்பிரியர்கள் மிக நீண்ட வரிசையில் கால் வலிக்க நின்று கொண்டு மதுபானங்களை கொள்வனவு செய்ததையும் அவதானிக்க முடிந்தது.

கடந்த 20.ஆம் திகதி ஊரடங்கு தளர்;த்தப்பட்டதை அடுத்து மக்கள் தங்களின் இயல்புவாழ்க்கைக்கு திரும்பியிருந்ததையும்  போக்குவரத்துக்கள் சாதாரணமாக இடம்பெற்றதையும் அவதாணிக்க முடிந்தது. மக்கள் அதிகளவானவர்கள் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதில் நாட்டம் காட்டியததையும் அவதானிக்க முடிந்தது.

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து மருந்தகங்கள் புடவைக் கடைகள் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு கடைகள் பூட்சிற்றிகள் சந்தைகள் சிகையலங்கார கடைகள் மதுபானக்கடைகள் என பலதும் திறக்கப்பட்டிருந்தது நகரப்பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகமாக கானப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

மதுபானக்கடைகளில் அன்றயதினமே காலை வேளையில் அதிகளவான ஆண்கள் நீண்ட வரிசையில் காணப்பட்ருந்தனர். தற்போதைய கூமார் ஒரு மாத காலமாக அடைக்கப்பட்டிருந்த பின்னர் திறக்கப்பட்ட மதுபானசபலைகளில்   வழமைக்கு மாறாக அதிகமானவர்கள் மாவட்டத்தில் எல்லா மதுபான சாலைகளிலும் மதுப்பிரியர்களினால் நிரம்பிக் கானப்பட்டிருந்தன.

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் மக்கள் எதுவித தொழில் வாய்ப்பக்களுமின்றி வருமானமிழந்து இருந்கும் நிலையில் அரசாங்கமும், பொது அமைப்புக்களும் முக்களின் காலடிக்குச் சென்று உலர் உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர், அரசாங்கமும் 5000 பணமும் கொடுத்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் விழிப்புடன் செயற்பட வேண்டியது மக்களின் தலையாய கடமையல்லவா? 

மதுவருந்துவது தமது அத்தியாவரியக் கடமையா? , மதுக் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு செயற்படுவது போன்று தமது குடும்பங்களிலும் அக்கறை செலுத்தினால் வாழ்வில் சிறந்த முறையில் முன்னேறலாம் அல்லவா? சேமிப்புப் பழங்கங்களைக் கைக்கொள்ளவும், இயற்கை வீட்டுத் தோட்டங்களை மேற்கொள்வும், மதுவுக்குச் செலவு செய்து வீணாக விரையம் செய்யும் பணத்தை பிள்ளைகளின் கல்விக்குப் பயன்படுத்தினால் நோயின்றி வாழவும், சிறந்ததொரு குடும்பம் பல்கலைக் கழகம் எனும் முதுமொழிக்கு ஏற்ப அனைவரும் ஒன்றிணைற்து சுபீட்சம் நிறைந்த நாட்டைக் கட்டிபெழுப்பலாம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. 

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத கசிப்பு உற்பத்திகளை முற்றாது இல்லாதொழிக்கவும், மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்திற்கு பொருட்கள் வாங்குவதற்கு வெட்ட வெயிலில் மீக நீண்ட வரிசையில் காத்திருந்து பொருட் கொள்னவவு செய்வது போன்று மதுப்போத்தல்களைக் கொள்வனவு செய்வதற்காக இவ்வாறு வரிசையில் நின்று கொண்டு கொள்வனவு செய்யும் நிலமைகளை இல்லாதொழித்து சிறந்ததொரு ஆரோக்கியமிக்க மனித சமூதாயத்தைக் கட்டியெருப்ப அரச மற்றும் அரச சார்பற்ற, ஏனைய பொது அமைப்புக்கள், பொலிசார் உள்ளிட்ட அனைவரும் ஒருமித்து கைகோர்த்து செயற்பட வேண்டும் என்பதையே அனைவரும் எதிர்பாக்கின்றனர். 
    
“குடும்பத்தாரின் அன்பே தலைசிறந்த அன்பு” – முதுமொழி.

   

SHARE

Author: verified_user

0 Comments: