20 May 2020

அம்பாரை ஒலுவில் தடுப்பு முகாமில் கொரொனா தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 28 கடற்படையினரை மட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதி.

SHARE

(சரவணன்)
அம்பாரை ஒலுவில் தடுப்பு முகாமில் கொரொனா தொற்று  கண்டுபிடிக்கப்பட்ட 28 கடற்படையினரை மட்டு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதி.
அம்பாரை ஓலுவில் தனிமைப்படுத்தும் தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் 28 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை மட்டக்களப்பு காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் சிகிச்சைக்காக  செவ்வாய்க்கிழமை (19) அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் எம்.எஸ்.ஜாபீர் தெரிவித்தார்.

வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த 80 பேரை அம்பாறை ஒலுவில் தனிமைப்படுத்தும் முகாமில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

இவர்ககளை பரிசோதனை செய்ததில் நேற்றைக்கு முன்தினம் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களை வெலிகந்தை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஏனைய 70 கடற்படையினருக்கு பரிசோதனை மேற்கொண்ட போது செவ்வாய்கிழமை (19) ஆம் திகதி 28 பேர் கொரோனா தொற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்களை இன்று செவ்வாய்க்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிட்சையளிப்பதற்காக கொண்டுவரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.












SHARE

Author: verified_user

0 Comments: