10 May 2020

கடந்த இருவாரங்களுக்குள் 227675 மில்லி லீற்றர் கசிப்பு, 227000 மில்லி லீற்றர் கோடோ, 45240 மில்லி லீற்றர் சட்டரீதியற்ற முறையில் விற்பனைக்குத் தயரான மதுபானம் கைப்பற்றல்.

SHARE
கடந்த இருவாரங்களுக்குள் 227675 மில்லி லீற்றர் கசிப்பு, 227000 மில்லி லீற்றர் கோடோ, 45240 மில்லி லீற்றர் சட்டரீதியற்ற முறையில் விற்பனைக்குத் தயரான மதுபானம் கைப்பற்றல்.
கடந்த இருவாரங்களுக்குள் 227675 மில்லி லீற்றர் கசிப்பு, 227000 மில்லி லீற்றர் கோடோ, மற்றும் 45240 மில்லி லீற்றர் சட்டரீதியற்ற முறையில் விற்பனைக்குத் தயாரக இருந்த மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன ஞாயிற்றுக்கிழமை (10) தெரிவித்தார்.

தற்போது பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள நிலையில் பல இடங்களிலும், கசிப்பு, கோடா, மற்றும், சட்ட ரீதியற்ற முறையிலான மது விற்பனை என்பன இடம்பெற்றுக் கொண்டு வருகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்தும் முகமாக களுவாஞ்சிகுடி பொலிசார் தீவிர செயற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளனர்.

அந்;த வகையில் களுவாஞ்சிகுடி பிரதேச உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.எம்.பாறுக் அவர்களின் ஆலோசனையின் பெயரில் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குணவர்த்தனவின் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின்போதே இந்த சட்டரீதியற்ற மதுபானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு களுவாஞ்சிகுடிப் பொலிஸ் பிரிவினுள் 75 இடங்களில் கைப்பற்றப் பட்டுள்ளதாகவும், இதில் 75 சந்தேக நபர்களும், கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி எம்.ஜி.யு.ஐ.குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.







SHARE

Author: verified_user

0 Comments: