18 Apr 2020

கட்டுரை : கொரோனா (COVID 19) நோய்த்தொற்றும் உலக நாடுகளும்.

SHARE
கட்டுரை : கொரோனா (COVID 19) நோய்த்தொற்றும் உலக நாடுகளும்.
(ஏ.கங்காதரன்) 

உலகமே தற்போது ஒரு பேரிடருக்கு முகம்கொடுத்துள்ளதனை யாவரும் அறிவோம். இந்த நேரத்தில் உலக மக்கள் அனைவரும்; (COVID 19) என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து விடுபடுவதற்கு மிகுந்த மன உறுதியுடன் செயற்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் (COVID 19) சீனாவின் வூகான் மாநிலத்தில் உருவாகி அந்த நாட்டுக்குள்ளேயே மெல்ல மெல்ல தனது வீரியத்தினை அதிகரிக்கின்றபோது ஏனைய உலக நாடுகள் அலட்சியமாக இருந்ததனை நாம் அனைவரும் அறிவோம்.

ஆனால் ஏனைய நாடுகளுக்கும் பரவத் தொடங்கியபோதுதான் சில நாடுகள் சிறியளவேனும் விழித்துக் கொண்டாலும் பல உலக நாடுகள் அலட்சியப் போக்கினையே கடைப்பிடித்தன இதன் விளையுதான் தற்போது உலக நாடுகள் சந்தித்துள்ள பேரிடராகும்.

இதில் ஒரு விடயத்தினை நாம் அவதானிக்கலாம் உலகையே அழிக்கின்ற வகையில் ஒரு தொற்றுநோய் உலகின் ஓர் இடத்தில் உருவாகினால் உலக நாடுகள் அனைத்தும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பொதுவான ஒரு வேலைத் திட்டம் உலக சுகாதார தாபனத்திடம் இருந்திருந்தாலும் அது கொள்கை அளவிலேயே இருக்கின்றதே தவிர செயற்பாட்டில் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில் இந்த (COVID 19) வைரஸ் உருவாகி உயிர் இழப்புகள் ஆயிரம் ஆயிரமாய் அதிகரிக்க தொடங்கிய போதுதான் சில ஆலோசனைகளை உலக சுகாதார ஸ்தாபனம், (WHO) உலக நாடுகளுக்கு வழங்கி இருந்தாலும் பல நாடுகள் (வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகள் உட்பட) இந்த ஆலோசனைகளை கேட்கவில்லை அல்லது கடைப்பிடிக்கவில்லை என்றே சொல்லலாம்.

இந்த பேரிடரின்போது வேடிக்கையானதும் துன்பகரமானதுமான விடயங்களும் உலகில் நிகழ்ந்துள்ளதனைக் காணலாம்.
அவை என்னவென்றால் உலகில் உள்ள சில நாடுகள் இந்த நோயைக் கட்டுப்படுத்திய விடயம் முதல் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் சரியான தகவல்களைக்கூட வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதனையும் சில உண்மைத் தகவல்களை வெளியிட்ட மருத்துவர்கள் நலன் விரும்பிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் எச்சரிக்கப்பட்ட அல்லது காணாமல் ஆக்கப்பட்டதுமானது மிகவும் வேதனை அழிப்பவையாக உள்ளதனைக் காணலாம்.

பேரழிவினை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து மனித குலத்தினைக் காப்பாற்ற வேண்டுமானால் அந்தத் தொற்றுநோய் உருவாகிய விதம் பரவும் விதம் அதன் அறிகுறிகள் போன்ற அடிப்படைக் காரணிகளை சரியாக அறிந்து கொண்டால்தான் அந்த நோய்த் தொற்றில் இருந்து உலக மக்களைக் காப்பாற்றலாம்.

மாறாக குறித்த வைரஸ் உருவாகியதாகச் சொல்லப்படும் நாடு குறித்த வைரஸ் உருவான விதம் மற்றும் அதனைக் கட்டுப்படுத்துகின்ற சரியான வழிமுறைகளை வெளிப்படையாகச் சொல்லாமல் மறைத்ததுடன் இரண்டு மாதம் கடந்த நிலையில் வேறொரு நாட்டில் இருந்துதான் எங்களது நாட்டுக்கு தொற்றியதாகவும் கூறுவதானது மனித குலமே வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.  

உலக சுகாதார தாபனம்  (WHO) ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஒரு கிளை அமைப்பாக இருக்கின்றபோது தனக்குள்ள (ஐநா சபை) அதிகாரங்களைக் கொண்டு இந்த தொற்றுநோயை உலகளவில் கட்டுப்படுதுவதற்கு அல்லது இல்லாது அழிப்பதற்கு மிகவும் இறுக்கமான தீர்மானங்களை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறு செய்யாது தற்போது நிலமை கட்டுக்கடங்காது பேரழிவாக மாறியுள்ளபோதுதான் பல நோய்த்தடுப்பு நடவடிக்கைகளையும் ஆலோசனைகளையும் உலக நாடுகளுக்கு வழங்குவதுடன் நேரடியாகவும் தனது பணியாளர்களை வைரஸ் (COVID 19) பரவுகின்ற நாடுகளுக்கு அனுப்பி கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்கின்றது ஆனாலும் இன்னும் பல நாடுகள் உலக சுகாதார தாபனத்தின் அறிவுரைகளைக் கேட்காது தனது விருப்பத்திற்கு ஏற்றால்போல் செயற்படுவதனால்தான் இந்த கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக்கொண்டே செல்வதனைகு; காணலாம். 

கொரோனா வைரஸ் ஆனது ஆசியாவில் (சீனா) தொடங்கி ஐரோப்பாவில் (இத்தாலி) கால் பதித்து தனது ஆட்டத்தினை உக்கிரமாக்கும் வரைக்கும் ஏனைய வல்லரசு நாடுகள் உட்பட அனைத்து உலக நாடுகளும் தங்களை இந்த வைரஸ் என்ன செய்யப் போகின்றது என்ற அலட்சியப் போக்கில் இருந்ததன் விளைவேதான் தற்போதைய பேரழிவுகள் எனலாம்.

உலக நாடுகளுக்கிடையிலான ஒற்றுமையின்மையும் தான் மாத்திரமேதான் வல்லரசு தனக்கு கீளேதான் ஏனைய நாடுகள் என்ற இறுமாப்புப் போக்கும் நாடுகளுக்கிடையே இருக்கும் வரைக்கும் இன்னும் பல கொரோனாக்கள் தொன்றுகின்ற போதும் இதேநிலைதான் மறுபடியும் வரும் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.

ஐநா சபையானது சகல நாடுகளுக்கும் சம நீதியினை வழங்குகின்ற ஒரு தன்னிச்சையான சபையாக இல்லாமல் ஓரிரு வல்லரசுகளின் கைப் பொம்மையாக இருப்பதே இதற்கெல்லாம் மூலகாரணம் என்பதனை உலகில் உள்ள மனிதாபிமானம் கொண்ட சமூக ஆர்வலர்கள் அனைவரும் அறிவார்கள்.

எனவே அனைத்து உலக மக்களும் தொற்று நோய்களானாலும் சரி ஏனைய இயற்கை அனர்த்தங்களானாலும் சரி தங்களைத் தாமே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம் என்பதனை மனதில் கொண்டு செயற்பட வேண்டும்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் சாதி மத இன மொழி நிற கலாசார பால் மற்றும் பிரதேச வேறுபாடுகளை மறந்து மனித நேயத்துடன் செயற்படுவோமானால் இந்த கொரோனா (ஊழுஏஐனு) என்ன இதைவிட பலமடங்கு வீரியமான எத்தனை கொரோனாக்களின் (ஊழுஏஐனு)  தாக்கத்தில் இருந்தும் எம்மைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

உலகில் உள்ள பல நாடுகள் ஏதோ ஒரு விதத்தில் தம்மை மற்ற நாடுகளில் இருந்து பெரிதாகக் காட்ட வேண்டும் என்பதற்றாக பொருளாதார ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதனைக் காண்கின்றோம். அண்மையில்கூட ஒரு நாடு உலகில் உள்ள தற்போதைய பேரிடரை மறந்து தனது இராணுவ பலத்தினை நிரூபிப்பதற்காக ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டதனையும் நாம் அறிவோம்.

எந்தவொரு நாடும் இராணுவ பொருளாதார விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக எந்தளவிற்கு முன்னேறினாலும் மருத்துவ ரீதியாக பாரியளவு முன்னேற முடியாமல் உள்ளதனைக் காண்கின்றோம் இருந்தும் கியூபா போன்ற நாடுகள் மருத்தவ ரீதியாக மற்ற நாடுகளை விட ஒருபடி மேல்நோக்கி முன்னேறினாலும் சில வல்லரசு நாடுகள் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லை என்றே சொல்லலாம்.

உலகில் உள்ள சகல நாடுகளும் ஒன்றிணைந்து தங்களுக்கிடையிலான மருத்துவ ரீதியான தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை பகிர்ந்துகொண்டு ஒரு பொதுவான அமைப்பினூடாகச் செயற்பட்டால் மனித குலத்தினை அழிப்பதற்கு உருவாகின்ற கோவிட் 19 (ஊழுஏஐனு) போன்ற புதிய புதிய நோய்களுக்கான மருந்துகளை மிகவும் இலகுவாக தயாரிக்கலாம் அல்லது குறித்த நோயில் இருந்து மக்களை எவ்வாறு பாதுகாக்கலாம் என்ற ஒரு பொதுவான வழிமுறைகளையாவது வரையறை செய்யலாம்.

ஆனால் இப்போது இந்த கொரோனா (ஊழுஏஐனு) நோய்க்கான மருந்தினைக் கண்டுபிடிப்பதில் பலநாடுகள் ஆர்வம் காட்டினாலும் அவை பற்றிய தகவல்களை ஏனைய நாடுகளுக்கு தெரியப்படுத்தாமல் இரகசியமாகச் செயற்படுவதனைக் காண்கின்றோம்.

இன்னுமொரு முக்கிய விடயத்தினையும் இங்கு நான் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன். 

உலகில் ஏற்பட்டுள்ள இந்த கொரோனா (COVIDபேரிடரினைப் பயன்படுத்தி சில நாடுகள் ஆதாயம் தேடுவதாகவும் சில உலக பயங்கரவாத அமைப்புகள் தங்களது நாசகார வேலைகளுக்கு இந்த நோய்த் தொற்றினை சாதகமாகப் பயன்படுத்துவதாகவும் அண்மைய உலக புலனாய்வு செய்திகளில் இருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.

எனவே ஏற்பட்டுள்ள பேரழிவில் இருந்து தமது மக்களை எவ்வாறு காப்பாற்றிக் கொள்வது என பல நாடுகள் முயற்சிகளை எடுத்தாலும் ஒருசில நாடுகள் இந்தப் பேரிடரில் குளிர்காய நினைப்பதனையும் காணலாம். 
மேலும் மக்கள் கொரோனா(COVID தொற்றில் இருந்து விடுபடுவதற்காக கூட்டமாக ஒன்றுகூட வேண்டாமென உலக நாடுகள் அனைத்திலும் நாளாந்தம் பல தரப்பாலும் கூறப்பட்டுக் கொண்டு வந்தாலும் ஆங்காங்கே மக்கள் ஒன்ற கூடுவதனையும் அதனால் கொரோனா (COVID பரவும் வீதம் அதிகரிப்பதனையும் காணலாம்.

குறிப்பாக இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மக்கள் தங்களது மார்க்க விடயமாக பல ஆயிரம்பேர் ஒன்றுகூடும் சம்பவங்கள் உலகில் ஆங்காங்கே நடைபெறுகின்றது. குறிப்பாக அண்மையில் இந்தியாவின் தலைநகரில் இவ்வாறாக முஸ்லிம்கள் ஒன்று கூடியதால் அங்கு கொரோனா வேகமாகப் பரவுவதற்கு அது வழிவகுத்துள்ளது. 

மேலும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் சிலர் கூறுகிறார்கள் தீமை செய்த மனித குலத்தை தண்டிப்பதற்கு (குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரானவர்களை) அல்லாதான் இந்த நோயை தோற்றுதித்துள்ளதாகவும் அல்லா ஒருவனால்தான் இதைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறுவதானது (ஆனால் புனித மக்கா மற்றும் மதினாவில் தற்போது ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது) மதங்களுக்கிடையிலான முரண்பாட்டினை மென்மேலும் அதிகரிக்க செய்யுமே தவிர அழிவில் இருந்து உலக மக்களைக் காப்பாற்ற முடியாது.

அண்மையில் கொரோனா ((COVID 19) தொற்றினால் இறந்த முஸ்லிம் ஒருவரது உடலை இலங்கை அரசு சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக தகனம் செய்திருந்தது. இதற்கு முஸ்லிம்கள் பலர் எதிர்ப்பினை வெளியிட்டிருந்த விடயமானது வேதனை அழிப்பதாக உள்ளது. 

இலங்கை அரசு தனது நாட்டு மக்களைப் பேரழிவில் இருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என நினைக்கின்றதே தவிர எந்தவொரு மதநெறிமுறைகளையும் தடுப்பதற்கோ அல்லது அதனை இல்லாமல் செய்வதற்கோ அல்ல இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நாட்டு மக்களும் அந்தந்த நாட்டு அரசுகளும் அங்குள்ள சுகாதாரத் துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினர் கூறுகின்ற நோய்த் தொற்றுப் பாதுகாப்பு நெறிமுறைகளையும் சட்டதிட்டங்களையும் பின்பற்ற வேண்டியது அவர்களது இன்றியமையாத கடமையாகும் மேலும் இதேபோன்று உலக சுகாதார தாபனம் அவ்வப்போது கூறுகின்ற ஆலோசனைகளையும் நெறிமுறைகளையும் ஒவ்வொரு நாடும் பின்பற்றி இந்தக் கொடிய தொற்று நோயில் இருந்து தத்தமது நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

இலங்கையில் கொரோனா ((COVID 19)  நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அண்மையில் கடந்த மாச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் ஊரடங்கு சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டிருக்கின்றது இந்தக் காலப்பகுதியில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஊரடங்கு சட்டத்தை மீறியதற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்தச் செயற்பாடானது நாட்டு மக்களுக்கு கொரோனா நோயின் தாக்கம் பற்றிய சரியான புரிதல் போதாமல் உள்ளதையே காட்டுகின்றது.

இந்தக் கொடிய தொற்றுநோயினை உலகில் இருந்து முற்றாக அழித்ததன் பிற்பாடு இன்னுமொரு சவாலை எதிர்கொள்வதற்கு தயாரானவர்களாக உலக மக்கள் அனைவரும் தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவேண்டும். ஏனெனில் கொரோனா வைரஸ் மக்களை மட்டும் கொல்லவில்லை உலகின் பொருளாதாரத்தினையும் மெல்ல மெல்ல அழித்துக்கொண்டே செல்கின்றது.

அழிந்து செல்கின்ற உலக பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பல ஆண்டுகளோ அல்லது பல தசாப்தங்களோ எடுக்கலாம் இதற்றாக உலகில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இரவு பகலாக உழைக்க வேண்டும். அன்றாட உணவிற்கே தட்டுப்பாடு ஏற்படலாம் இதனால் இனிவரும் காலங்கள் உலக பொருளாதாரத்தின் தன்மையினை ஒரு விவசாயப் பொருளாதாரமாகவும் மாற்றலாம் என்பதிலும் சந்தேசம் இல்லை.

சிரேஸ்ட்ட ஊடகவியலாளர், 
ஏ.கங்காதரன்

SHARE

Author: verified_user

0 Comments: