16 Apr 2020

மட்டக்களப்பு நகரப்பகுதியில் பழங்களுக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் விலைகள் சாதாரணமாக கானப்பட்டது

SHARE

மட்டக்களப்பு நகரப்பகுதியில் பழங்களுக்கு தட்டுப்பாடு நிலவியபோதும் விலைகள் சாதாரணமாக கானப்பட்டது.நகரப்பகுதிகளில் இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடகப்பிரிவின் அவதானம் செலுத்தப்பட்டது அவ்வேளை மக்களின் கவனம் பழங்கள் கொள்வனவு செய்வதில் அதிகளவான நாட்டம் கானப்பட்டது தற்போது கானப்படுகின்ற அதிக வெப்பத்தினால் அதிகளவான மக்கள் பழங்கள் கொள்வனவில் ஈடுபட்டது அவதானிக்க முடிந்தது.

வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பழங்களுக்கு விலைகள் சற்று அதிகமாகவே கானப்பட்டது உள்ளுரில் உற்பத்திபண்னப்படும் பழங்கள் விலைகுறைவாகவே கானப்பட்டது புத்தாண்டு காலத்தினை அமைதியான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் மக்கள் பொருட்கொள்வனவில் அதிகளவு நாட்டம் காட்டாமை அவதானிக்க முடிந்தது.

பழ வியாபாரிகள் இம்முறை அதிகளவு நட்டத்தினை எதிர்கொண்டுள்ளதாகவும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தினை எவ்வாறு ஈடுசெய்வது என தெரியாதுள்ளதாகவும் முறையிட்டனர். புத்தாண்டிற்காக அதிகளவான பழங்களை கொள்வனவு செய்துவைத்து இருந்ததாகவும் அவ்வேளை ஊரடங்கு தளத்தப்படாத நிலையில் தங்களால் உரியகாலத்தில் விற்கமுடியாமல் பழுதடைந்து விசியதாக கவலை தெரிவித்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: