21 Apr 2020

எம் மீது சேறு பூசுகின்ற நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.(வீடியோ)

SHARE
எம் மீது சேறு பூசுகின்ற நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
போலி முகப்புத்தகங்கள் வாயிலாகவும், பதியப்படாத இணையத்தளங்கள் வாயிலாகவும் எமது நற்பெயருக்குக் கழங்கும் ஏற்படுத்தும் வித்தில் தற்போது செய்தி ஒன்ற வெளிவந்துள்ளது. அச்செய்தியில் எதுவித உண்மையும் இல்லை. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இரா.சாணக்கியனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜூம் இணைந்து பொலநறுவையில் இருந்து அரிசி லொறியில் மதுபானப் போத்தல்களைப் பதுக்கிக் கொண்டு வந்ததாகவும், பின்னர் அவர்கள் பொரிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. 

இவ்விடையம் குறித்து களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள இரா.சாணக்கியனின் காரியாலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (21) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…

என்னைப்பற்றியும், பிரதேச சபை உறுப்பினர் வினோராஜைப் பற்றியும் தவறாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் வெளிவந்துள்ளதை செவ்வாய்கிழமை காலையில் அறிந்தோம். அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல்களாகும். கடந்த ஒரு மாத காலமாக அமுல்ப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் மத்தியில் அதிகளவு நிவாரணப் பணிகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொண்டது நானும், வினோராஜிந்தான் என நான் நினைக்கின்றேன். அது மக்களுக்கும் தெரியும்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தரல் 5 கிலோ அரிசிப் பை மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் தட்டுப்பாடாக இருந்தது. பின்னர் பொலநறுவைக்குச் சென்று அங்கு அரிசியைக் கொள்வனவு செய்து மட்டக்களப்புக்குக் கொண்டு வந்தோம். நாம் நிவாரணங்களைக் கொண்டு செல்லும்போது சோதனைச் சாவடிகளில் பாதுகாப்புப் படையினல் எமது வாகனத்தை சோதனை செய்தது உண்மை அது வழமையானதாகும். அதற்கு நாம் பெற்றிருந்த அனுமதியைக் காண்பித்துக் கொண்டு சென்று வந்தோம். இவ்வாறு ஒன்பதினாயிரம் குடும்பங்களுக்கு நாம் உதவி செய்திருந்தோம். இவ்வாறு செயற்பட்டுவரும் எமக்கு இவ்வாறு களங்கப்படுத்தும் செய்திகளை வெளிவந்திருப்பதானது கவலையளிக்கின்றது. இது நாம் மக்கள் மத்தியில் பெற்றிருக்கும் செல்வாவக்கைக் களங்கப்படுததும் செயற்பாடாகும்.

எனவே நாங்கள் எதுவித மதுபானப் போத்தல்களைக் கொள்வனவு செய்யவோ இல்லை. இது கேவலமான, வங்குறோத்து அரசியல் செய்பவர்கள்தான் இவ்வாறான வேலைகளைச் செய்பவர்கள் உடன் நிறுத்த வேண்டும். மக்கள் மீது அக்கறை கொண்ட நாங்கள் கொரோனா உயர் அச்சத்தின் மத்தியில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் எமது மனம் தளர்ந்து போகும் நிலைக்கு யாரும் பொய்யான செய்திகைளை பிரசுரிக்க வேண்டாம். 

இச்சம்பவம் குறித்தது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸில் முறைப்பாடு செய்யவுள்ளதுடன், இதற்கு எதிராக நடவடிக்கையையும் நாம் மேற்கொள்ளவுள்ளொம் என அவர் இதன்போது தெரிவித்தார். 

இச்சந்திப்பின்போது  மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மே.வினோராஜ் அவர்களும், கலந்து கொண்டு கருத்துக்களைத் தெரிவிதார்.



SHARE

Author: verified_user

0 Comments: