21 Apr 2020

மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தாக்குதலுக்குள்ளானோரின் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது

SHARE
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தாக்குதலுக்குள்ளானோரின் நினைவாக நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு ஆராதனை நிகழ்வில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூறும் முகமாகவும், ஈடேற்றம் வேண்டியும் நினைவுச் சுடரேற்றும் விசேட நிகழ்வு இன்று(21)  காலை தாக்குதலுக்குள்ளான தேவாலயத்தின் முன்பாகத்தில் இடம் பெற்றது. 

இதன்போது குறித்த சம்பவத்தில் உயிர்நீத்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொரோனா நோய்த் தொற்று தொடர்பான சமுக இடைவெளியினைப் பின்பற்றி கட்டம் கட்டமாக தீபமேற்றியதுடன் அவர்களின் ஈடேற்றத்திற்காக பிராத்தனைகளிலும் ஈடுபட்டனர். 

சீயோன் தேவாலய நிருவாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வுக்கு குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கே பொலிசாரால் அனுமதி வழங்கப்பட்டிருந்ததுடன், பொலிசாரும், இரானுவத்தினரும் இந்த நிகழ்வை நடாத்துவதற்கு பூரண பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

குறித்த தாக்குதலில் 31 பேர் உயிர்நீத்திருந்ததுடன் 14 சிறுவர்களும் மறணித்திருந்தனர். இச்சம்பவத்தில் 82 பேர் படுகாயமுற்று வைத்திய சிகிச்சைக்குட்படுத்தப்பட்டனர்
இந்த நினைவு தினத்தையொட்டி கொரோனா வைரஸ் பரவும் சூழலை கருத்திற் கொண்டு எவ்வித கூட்டு வழிபாடுகள் எதுவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கவில்லை எனவும் தேவாலயத்தின் நிருவாகிகள் தெரிவித்தனர்
.






SHARE

Author: verified_user

0 Comments: