30 Apr 2020

இளைஞர்கள் ஊடாக வீட்டுத் தோட்டத்தினை மேம்படுத்தும் வேலைத் திட்டம்.

SHARE
(ஏ.எச்.ஏ. குஸைன்)

இளைஞர்கள் ஊடாக வீட்டுத் தோட்டத்தினை மேம்படுத்தும் வேலைத் திட்டம்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இளையோர் மனித வளத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இளைஞர்கள் ஊடாக வீட்டுத் தோட்ட விவசாயத்தை மேம்படுத்தும் வேலைத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலரும் சட்டத்தரணியுமான ஹபீப் றிபான் தெரிவித்தார்.

"வீட்டுத் தோட்டத்தினூடாக சுகாதாரமான உணவுகள்" எனும் தொனிப் பொருளின் கீழ்இளைஞர்களின் வீடுகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான பயிர் நாற்றுக்கள் வியாழக்கிழமை (30.04.2020) கோறளை மத்தி கோறளை மேற்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் விநியோகிக்கப்பட்டன.

இந்த வேலைத் திட்டம் தொடர்பாக சமூக ஆர்வலர் சட்டத்தரணி ஹபீப் றிபான் கருத்துத் தெரிவித்தார்.

அதுபற்றி அவர் மேலும் கூறியதாவது.

கொரோனா வைரஸ் தொற்றின் முற்காப்பு நடவடிக்கையாக எல்லோரும் வீட்டில் முடங்கியுள்ளதால் அதிகமான இளைஞர்கள் சமூகவலைத்தளங்களிலும் அலைபேசிகளினூடான விளையாட்டுக்களிலுமே கூடுதலான நேரத்தை வீணடிக்கின்றார்கள்.

அதனை தவிர்த்து இவ்வாறான இடர் நிலைமைகள் ஏற்படுகின்றபோது தங்களைச் சவால்களுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக மாற்றியமைக்கும் செயற்பாடுகளில் இறங்க வேண்டும் என்ற நோக்கில் இத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதனால் இளைஞர்களை வீட்டுத் தோட்ட விவசாயத்தில் ஈடுபடுத்தும் விதமான திட்டம் ஆரம்பிக்கட்டு அதில் இளைஞர்கள் ஆர்வமுடன் பங்குபற்றி விருவதாகவும் ஹபீப் றிபான் தெரரிவிதார்.

மேலும் எதிர்வரும் காலங்களில் போதைவஸ்து பாவனையற்ற புத்தாக்கம் கொண்ட சிறந்த இளைஞர் சமுதாயத்தினை உருவாக்குவதற்கு பல்வேறு செயற்திட்டங்களை வடிவமைத்திருப்பதாகவும் அவர் மேலும் சொன்னார்.



SHARE

Author: verified_user

0 Comments: