12 Apr 2020

நேர்காணல் : ஆச்சாரிய பண்டிதர், அருட் கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களுடனான செவ்வி.(வீடியோ)

SHARE

(சக்தி)


ஆச்சாரிய பண்டிதர், அருட் கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களுடனான செவ்வி.
உலக நாகரீகத்தின் முன்னோர்களாகவும், பண்டைக்கால பெருமை மிக்கவர்களாகவும், நாகர், இயக்க சந்ததியினராகவும், இன்றுவரை உலகெங்கும் வாழும் செழுந் தமிழர்களுடைய பாரம்பரியமானது இன்றய காலகட்டத்தில் பலராலும் கடைப்பிடிக்கப்பட்டு வந்தலும். தற்கால இளம் சந்ததியினரால் அந்த பாரம்பரியங்கள் கடைப்பிடிக்கப் படுகின்றதென்பது ஒப்பீட்டு ரீதியில் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றன. இந்நிலையில்தான் இலங்கை உட்பட உலக நாடுகளையெல்லாம் கொவிட் -19 எனப்படும், கொரோனா எனும் புதிய வகை வைரஸ் நோயினால் உலகையே கிலி கொள்ளச் செய்துள்ள இந்நிலையில் தமிழர்கள் கடந்த காலங்களில் கைக்கொண்டு வந்த நடைமுறைகளை தமிழர்களல்லாதவர்களும், கைகொண்டு வரும் இந்நிலையில் மட்டக்களப்பு பெரியபோரதீவு காளிபுரம் அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் பிரதம குருவும், ஆச்சாரிய பண்டிதர், அருட் கவியரசு விஸ்வப்பிரமம் வை.இ.எஸ்.காந்தன் குருக்களுடனான நேர்காணல்.


கேள்வி : தற்காலத்தில் மரபு வழிப் பாரம்பரியங்கள் விதைக்கப்பட்டுள்ளதா திதைக்கப்பட்டுள்ளதா எனக் கூறங்கள்?

பதில் : “உலக நாகரீகத்தின் முன்னோடிகளாக இருந்தவர்கள் தமிழர்கள் இதிலே எந்த மாற்றமும் இல்லை.” நாகரீகங்களின் பண்பு நயத்தக்க நாகரீகம், நனித்தக்க நாகரீகம் என வள்ளுவர் சொல்வது போல தமிழர்களுடைய நாகரீகமும் நயத்தக்க நாகரீகம், நனித்தக்க நாகரீகமாக, இருந்திருக்கின்றது. அதனடிப்படையில் தமிழர்களுக்கென்றொரு மரபு பேணப்பட்டு வந்திருக்கின்றது. அவை இன்று வரைக்கும் இயற்கையைத் தெய்வமாகப் பார்க்கின்ற மரபு வந்து கொண்டிருக்கின்றது. 

இந்நிலையில் தற்காலத்தில் மனிதனை மனிதன் அழித்த காலங்கள் மறைந்து மனிதனை இயற்கை அழிக்கின்ற காலங்களாக மாறி தற்போது மனிதனை சத்தமில்லைமல் ஒரு விசக்கிருமி அழித்துக் கொண்டிருக்கின்றது. இதனால் சாதி மதம், பேதம் கடந்து அனைவரும் அச்சப்பட வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அதற்குரிய காரணங்கள் வேறு. ஆனால் இவற்றுக்கு தமிழர்களுடைய பாரம்பரியத்தில் வந்த சித்திரபை; புத்தாணடும், அதிலே நாம் வைக்கின்ற மருத்து நீர்கூட பெரிய மருந்தாகும். இவற்றுக்கு மேலாக முன்னோர்கள் வீட்டு வாசலிலே கிருமி நாசினிகளாக, சாணம், மஞ்சள், தெழித்தல், கோலம் போடுத்ல், போன்ற பழக்கங்களையும் கைக் கொண்டு வந்துள்ளார்கள். சாணத்தில் பிள்iயார் பிடித்து வைத்து அதிலே அறுகம்புல்லை வைத்து விட்டால் அது கெட்டுப் போகாமல் இருக்கும். புழுக்கள் உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் இவை இரண்டிற்கும் இருக்கின்றது. அதுபோல் வெநைதையம், வெள்ளைப்பூடு, மஞ்சள், இஞ்சி, போன்ற பலவற்றையும் உணவில் சேர்த்து வந்தல், அவை ஆரோக்கியத்தைத் தரும் மருந்தாகும்.

அபோல் வேப்பை இலை, (பத்திரம்) இது ஒரு அபூர்வமான கிருமி நாசினியாகும். அம்மை நோய்க்குக்கூட இந்த பத்திரத்தையும், மஞ்சளையும், அரைத்து பூசப்படுகின்றன. தற்போது அணியப்படுகின்ற முகக் கவசங்கள், தமிழர்களுடைய பண்டைய காலங்களிலிருந்து அணியப்பட்டு வந்திருக்கின்றன. இதனை வாய்ச் சீலை கட்டுதல் என நாம் சொல்கின்றோம். கை கழுவுதல் என்பதை ஆரம்பத்திலிருந்தே எமக்கு எமது சமயத்தினூடாக சொல்லப்பட்டுள்ளது கைகளை மஞ்சளிலே தேய்த்து பின்னர் சுத்தமான நீரால் கழுவினால் விசக்கிருமிகள் அழிந்து விடும் என சொல்லப்படுள்ளது. இவ்வாறுதான் எமது சமூகம் பாரம்பரியமாக வாழ்ந்து வந்துள்ளது. 

இது ஏன் சிதைக்கப்படுகின்றது என்றால் அன்னிய நாகரீகத்தின் வளர்ச்சியாம், இருந்த போதிலும் அதற்குள்ளும், அனித்தக்க நாகரீகம், நயத்தக்க நாகரீகம், இலகுவாக கைப்பிடிக்கப்பட வேண்டும். 

சைவம் என்றால் புனிதம், தூய்மை, அன்பு, ஜீவகாருண்யம், எனவும், இந்து என்றால் இம்சையைக் கண்டு துர்க்கிப்பவன், எனவும் சொல்லப் படுகின்றது. எனவே அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாக இரு என எமது சமயம் சொல்லிக் கொடுத்தை தற்போது அனைவரும் கைக் கொள்வதை பார்க்கக் கூடியதாகவுள்ளது. 

ஆரம்பகாலத்தில் மிருகங்கள் மனிதனை அழித்தன, பின்னர் மனிதன் மிருகங்களை அழித்தான், பின்னர் மனிதன் மனிதனை அழித்தான், தற்போது அனைத்து படை பலத்துடன் இருக்கின்ற நாடுகள்கூட சிறிய விசக்கிருமிக்கு அஞ்சுகின்றதைப் பார்க்கின்றோம். எனவே நம்மவர்கள் பெரியவர்கள் காட்டித்தந்த அனைத்து நடைமுறைகளையும் கைக் கொள்ள வேண்டும். விஞ்ஞானம் செயலிழந்து போகுமிடத்து மெஞ்ஞானம் வருகின்றது. விஞ்ஞானம் முகத்திற் கண்கொண்டு பார்ப்பதாகும், மெஞ்ஞானம் அகத்திற் கண்டு கொண்டு பார்ப்பதாகும். எனவே தமிழர்களுடைய பாரம்பரியங்கள் மீண்டும் சிதைக்கப்படாமல் விதைக்கப்படும் என்பதாகும்.

கேள்வி : தற்போதைய காலகட்டத்தில் எவ்வாறு வீட்டிலிருந்து சித்திரை வருடப்பிறப்பைக் கொண்டாடுவது, மக்கள் தமாகவே எவ்வாறு வீடுகளில் மருத்தது நீர் தயாரிப்பது அதன் மகிமை என்ன என்று சொல்லுங்கள்? 

பதில் : என்னதான் பிரச்சனைகள் இருந்தாலும், புத்தாண்டு என்ற ரீதியில் தமிழர்களும் சிங்களவர்களளும் ஒன்று படுகின்றார்கள். அதனை இந்து பௌத்த புத்தாண்டாகத்தான் பார்க்கலாம். இரு கலாசாரத்தின் அடிப்படையில்தான் சித்திரைப் புது வருடம் கொண்டாடப்படுகின்றது. தமிழர்கள் மருத்து நீர் வைப்பது போல் பௌத்தர்கள் பேத்தெல் என்ற பெயரில் மருந்துகள் கலந்த எண்ணை தேய்க்கின்றார்கள். அந்த வகையில் எதிர்வருகின்ற 13.04.2020 பங்குனி 31 ஆம் திகதி இம்முறை பங்குனி மாதத்தில்தான் சித்திரை வருடம் பிறக்கின்றது. மாலை (முன்னிரவு) 7.26 நிமிடத்திற்கு சார்வரி வருடம் பிறக்கின்றது. அன்றயத்தினம் பின்னேரம் 3.26 நிமிடமிருந்து அன்றிரவு 11.26 நிமிடம் வரை புண்ணிய காலமாக கருதப்படுகின்றது.  இது வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி அன்றயத்தினம் இரவு 8.23 வருடம் பிறக்கின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தலையிலே இலவம் இலையும், காலிலே விளா இலையும் வைத்து மருத்து நிர் வைக்கவேண்டும்.

“மருத்துநீர்” என்பது இது மருந்து நீராகும். இது இன்று நேற்றல்ல பண்டைய காலம் முதல் நம்மவர்கள் செய்து வருகின்றார்கள். மேச ராசியிலே சூரியன் வருகின்றது அதிலிருந்து புது வருடம் ஆரம்பிக்கின்றது. அப்போதே எமது உடம்பை நோய்கள் வந்து தாக்கக் கூடாது என்பதற்காக மருந்து நீரை பிரதானமாக வைத்திருக்கின்றார்கள். அதிலே தாமரைப்பூ, தாளம்பூ, மாதுழம் பூ, கோசலம், கோமயம், பால், அறுகு, சுகுக்கு, கோரோசனை, குங்குமப்பூ, திப்பிலி, மிளகு, சுக்கு, மஞ்சள், உள்ளிட்ட பல பொருட்களை இட்டு நீர் இட்டு காய்ச்சி எடுப்பதாகும். இவை அனைத்தும் அபூர்வமான வைத்தியம் சார்ந்த ஒரு முறையாகும். இதனை தலையில் தேய்த்தும், குடிக்கும் போதும் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுகின்றது. புத்துணர்ச்சி வருகின்றது. 

தற்போது இறை நம்பிக்கை குறைந்து விட்டது. வழிபாடுகளும், கவர்ச்சியாக வந்து விட்டது. சிலர் பழைமைவாய்ந்த விடைங்கள் ஒரு அனாகரிகம் எனவும் தள்ளிவிடுகின்றார்கள். இந்நிலையில்தான் அவ்வப்போது அழிவுகள் வருகின்றன. இவ்வாறான அழிவுகளும் மனிதனை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இயற்கையின் சீற்றத்தினால்தான் வருகின்றன. 

எனவே தற்போதைய காலகட்டத்தில் ஆலயங்களிலும், வீடுகளிலும், மருத்து நீர் காய்ச்சி, வீடுகளில் காய்ச்சாதவர்களுக்கு ஆலய நிருவாகங்கள் மக்களின் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று கொடுக்க வேண்டும் ஏனெனில் கடந்த காலத்தில் மக்கள் ஆலயங்களுக்குத் தேடி வந்தர்கள், தற்போது மக்கள் வர முடியாத நிலமை தற்போதைக்கு மக்களின் காலடிக்கு ஆலய நிருவாகத்தினர் கொண்டு செல்ல வேண்டும். இதனை நிறைவோடு நிருவாகத்தினர் இதனைச் செய்ய வேண்டும். ஆகவே அனைவரும் மருத்து நீர் தேய்த்து வழிபாடு செய்ய வேண்டும், மக்களை வீட்டிலே இருந்து மருத்து நீர் தேய்த்து, இறை வழிபாடு செய்யுமாறு அனைத்து ஆலய நிருவாகத்தினரையும், வேண்டுகின்றேன்.

கேள்வி: தமிழர்களின் வாழிவியலில் கண்ணகியம்மன் வழிபாடு இன்றியமையாததாகி விடுகின்றன. அடுத்து வரும் மாதம் கண்ணகியம்மன் சடங்கிற்குரிய காலமாகும், எனவே மக்கள் வெளியே வரமுடியாத இக்காலகட்டத்தில் எவ்வாறு கண்ணகியம்மன் குளிர்த்தியை மேற்கொள்வது?

பதில்: வைகாசி மாதம் என்றால் வைகாசம் காசம் என்றால் நோய், நோய் பரவுகின்ற மாதமாகும். இக்கலத்தில் கண்கியம்மன் ஆலயங்களில் திருக்குளிர்தி பாடப்படுவது. தற்போதைய காலத்தில் குளித்தில் பாடல் பாடலாமான என கேள்வி எழுகின்றது. தெய்வங்களைக் குளிர வைக்கின்ற மாதமாக இந்த மாதம் இருக்கின்றது. இக்காலத்திலும் ஆலயங்களிலெல்லம் பூஜைகள் நிறைவாக நடைபெறவேண்டும். அதற்காக வேண்டி, நாட்களைக் குறைத்து பூஜை செய்து அப்பகுதி முழுவதும் கண்ணகியம்மன் குளித்திப் பாடல் கேட்கும்படி பாடி, இதனை களியாட்டங்கள் இல்லாமல், சிறப்பாக அனைத்து ஆலயங்களிலும் செய்யப்பட வேண்டும். குளித்தி பாணக்கங்கள் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதிலே சேர்கின்ற வெங்காயம் உள்ளிட்ட பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகின்றன. எனவே அனைத்து கண்ணகி அம்மன் ஆலயங்களிலும் திருக்குளிர்த்தி நிற்சயமாக செய்யப்பட வேண்டும், குளித்திப் பாடல்கள் அனைவரினதும் காதுகளுக்குக் கேட்பதற்கு வழிசெய்ய வேண்டும், செலவைக் குறைத்து பூஜைகள் மேற்கொண்டு குளித்தி தீர்த்தம் ஆலய தர்மகத்தாக்கள் ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று மக்களுக்குப் பகிர்ந்தழிக்க வேண்டும். 

கேள்வி: எதிர்வருகின்ற காலம் பண்டிகைகளுக்குரிய காலமாக உள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அவற்றை எவ்வாறு எதிர் கொள்ள வேண்டும்? 

பதில்: தற்போது உலகலே நடுங்கிக் கொண்டிருக்கின்ற இக்காலட்டமாகவுள்ளது. இந்நிலையில் ஒவ்வொருவரும் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது இங்கு முக்கியமானமாகும். ஆயுதம் தூக்கி மனிதர்களை அழித்தவர்கள்கூட தங்களது ஆயுளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக களத்தில் நிங்கின்றார்கள். மனிதர்களுக்கு சிந்தனையும், சிந்தையும் நமக்கு முக்கியம். ஓவ்வொரு மனிதனும், சந்தோசமாக, ஆரோக்கிமாக வாழ வேண்டும் என்பதறங்காக தற்போது தனித்திரு, முக கவசம் அணியுங்கள், சுத்தமாக இருங்கள், என அனைவரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். அதனைக் கேட்டு நடக்காதவர்கள் மனிதத் தன்மையை உணராதவர்கள்தான். 

எனவே ஆலயங்களுக்கு கூட்டமாக  அதிகம் பேர் போகவேண்டாம், கைகளை மஞ்சள் நீர், அல்லது மருந்துகள் கொண்டு கழுவி சுத்தாமாக இருங்கள், அரசாங்கம் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும். இளைஞர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீடு திருந்தினாலும், நாடு திருந்தும். 
SHARE

Author: verified_user

0 Comments: