28 Apr 2020

போரதீவுப்பற்றில் 15568 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

SHARE
(திலக்ஸ்)

போரதீவுப்பற்றில் 15568 குடும்பங்களுக்கு  5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.
உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் கோரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கத்துடன் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளதன் காரணமாக, வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா மானிய கொடுப்பனவானது மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குடும்பங்களிற்கு வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி பயனாளிகள் 11147 குடும்பங்களிற்கும், சமுர்த்தி காத்திருப்போர் பட்டியலில் உள்ள 2016 குடும்பங்களிற்கும், தொழிற்பாதிப்பு காரணமாக வாழ்வாதாரம் இழந்த 451 குடும்பங்களிற்கும், மேன்முறையீடு செய்த 21 பயனாளிக் குடும்பங்களிற்கும் வழங்கப்பட்டுள்ளது என  போரதீவுப் பற்றுப் பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.


இது தவிர முதியோர் கொடுப்பனவு பெறும் 1085 நபர்களுக்கும், முதியோர் காத்திருப்பு பட்டியலில் உள்ள 293 குடும்பங்களிற்கும், விசேட தேவையுடைய 454 பயனாளிகளுக்கும், விசேட தேவையுடைய காத்திருப்பு பட்டியலில் 84 பயனாளிகளுக்கும், சிறுநீரக நோயாளர்களில் 17 நபர்களுக்கும் மொத்தமாக 15568 பயனாளிகளுக்கு 77,840,000 ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஏப்பிரல் 05ம் திகதிக்கு பின்னர் முதியோர்களாக வயதை அடைந்த   27 முதியோர்களுக்கும், சிறுநீரக நோயாளர்களாக மருத்துவ அறிக்கை சமர்ப்பித்த 03 நபர்களுக்குமாக 30 பயனாளிகளுக்கு மானியம் பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும்  பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகி மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: