29 Mar 2020

தொழிலை இழந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி.

SHARE
தொழிலை இழந்துள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரி.
கொரோனாவைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நோய்தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கான ஊடரங்க சட்டம் மூலமாக மட்டக்களப்பு மாவட்டத்திலே கிட்டத்தட்ட 8000 இற்கு மேற்பட்ட நாளாந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்து நிற்கின்றனர்.

அதிலும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்க்கை நடாத்திவரும் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வாழ்வாதாரத்தை இழந்த காரணத்தால்  தங்களது உணவுத் தேவையை பூர்த்தி செய்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் நோக்கியுள்ளனர். 

இவ்வாறான நிலைமையினை கருத்தில் கொண்டு மட்டக்களப்பு புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் பணியாளர்கள் மற்றும் இளைஞர் அணி புலம்பெயர் உறவுகளின் உதவி மூலமாக உலர் உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. அதனை மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக இதுவரையில் 140 குடும்பங்களிற்கான உதவியினை வழங்கியுள்ளனர். தொடர்ச்சியாக உதவி வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும், இதற்கான உதவியினை வழங்க முன்வருபவர்கள் மற்றும் உதவி தேவைப்படுபவர்கள் பிரதேச செயலாளர் ஊடாக தங்களை தொடர்புகொள்ள முடியும் எனவும் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின்; பணிப்பாளர் க.பிரதீஸ்வரன்; தெரிவித்துள்ளார். 











SHARE

Author: verified_user

0 Comments: