22 Mar 2020

சிறுபோக வேளான்மை பயிற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் எவ்விதமான தடைகளும் இன்றி தங்களின் விவசாய பணிகளை தொடரலாம்.

SHARE
(ஆனந்தன்) 

சிறுபோக வேளான்மை பயிற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் எவ்விதமான தடைகளும் இன்றி தங்களின் விவசாய பணிகளை தொடரலாம்.சிறுபோக வேளான்மை பயிற்செய்கையில் ஈடுபடுகின்ற விவசாயிகள் எவ்விதமான தடைகளும் இன்றி தங்களின் விவசாய பணிகளை தொடரலாம். என அரசாங்கம் பணிப்புரை விடுத்ததை தொடந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மட்டக்களப்பு சிறுபோக விசாயிகள் எவ்விதமான அச்சங்களும் இன்றி தங்களின் விவசாய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி வழங்கும்படியாக பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தார.;

விவசாயிகள் உரியகாலத்தில் தங்களின் பணிகளை முன்னெடுக்காது தவறும் பட்சத்தில் பயிர்செய்கை காலம் பிற்போடப்படுமாயின் நீர் வழங்குவதி சிரமங்கள் ஏற்பட வாய்ப்பாகும் அதனால் உரிய காலத்தில் பயிரும்படியாக விவசாயிகளை அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்;.

சகல விவசாயிகளுக்கான மானிய உரவிணியோகம் எவ்விதமான தடையும் இன்றி உரிய காலத்திற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார் சிறுபோக விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை என்றும் அவர்கள் வழமையான நடைமுறையினை பின்பற்றி தங்கள் தொழிலில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. 



SHARE

Author: verified_user

0 Comments: