26 Mar 2020

மட்டக்களப்பில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று லங்கா சதொச வியாபார நிலைங்களை அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு.

SHARE
(ஆனந்தன்) 

மட்டக்களப்பில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று லங்கா சதொச வியாபார நிலைங்களை அரசாங்க அதிபரினால் திறந்து வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வந்த லங்கா சதொச விற்பனை நிலையங்கள் முடப்பட்டு இருந்த நிலையில் தற்போது நிலவும் அசாதாரன நிலையினை கருத்திற்கொண்டு மக்களுக்கு சுமுகமான பொருட்கள் வினியோகம் நடைபெற வேண்டும் என்பதற்காக வியாழக்கிழமை (26) காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, மற்றும் மட்டக்களப்பில் கள்ளியங்காட்டு களஞ்சியசாலை ஆகிய லங்கா சதொச வியாபார நிலைங்களை அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா திறந்து வைத்தார்.

இன் நிகழ்விற்கு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சனி முகுந்தன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புன்னியமூர்த்தி மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் பிரதேச செயலாளர் ரி.வாசுதேவன் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொன்டனர்.  

மக்கள் அனாவசியமான நடமாட்டத்தினை குறைக்கும் முகமாக சுகாதார திணைக்களம் வேண்டுகொள் விடுக்கின்ற நிலையிலும் மக்கள் முண்டியடித்துக்கொன் பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவதை எல்லா இடங்களிலும் கானக்கூடியதாகவுள்ளது. ஊரடங்கு தளர்த்தப்படுகின்ற நேரங்களில் இவ்வாறான செயற்பாடு காணப்படுவதை மக்கள் குறைக்கும்படி வேண்டப் படுகின்றனர்.      

மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் சுகாதார திணைக்களத்தின் பங்களிப்புடனும் ஆலோசனைகளுக்கும் அமைவாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி கலாமதி பத்மராஜா அவர்களின் வழிகாட்டல் மூலம் இரானுவ பொலிஸ் மற்றும் உள்ளுராட்சி  சபைகளின் உதவிகளும் கோரப்பட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வினியோகங்கள் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றது 

அரசாங்கத்தின் உதவித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதற்கு முன்னர் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவிகள் மூலமாக மக்களுக்கான தேவையான நிவாரண பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது அந்தவகையில் வியாழக்கிழமை (26) லங்கா சதொச விற்பணை நிலையம் தற்போது மட்டக்களப்பு கள்ளியங்காட்டு களஞ்சியசாலையில்  அரசாங்க அதிபரின் அயராத முயற்சியினால் திறந்து வைக்கப்பட்டு மக்களுக்கான அத்தியாவசிய பொருள்கள் விற்பனை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 











SHARE

Author: verified_user

0 Comments: