17 Mar 2020

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்குரிய மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் வழங்கி வைப்பு.

SHARE
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்குரிய மாதிரி வினாத்தாள்கள், செயலட்டைகள் வழங்கி வைப்பு.
களுவாஞ்சிகுடியில் இருந்து இயங்கிவரும் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின்  தவிசாளர் இரா.சாணக்கியனின், தலைமை கீழுத்துவத்தின்கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பின்தங்கிய பிரதேசங்கள் அனைத்திலும், அவ்வமைப்பின் சேவைகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் கடந்த 05 வருடங்களாக தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை தயார்ப்படுத்தி சித்தி வீதத்தை அதிகரிக்கும் நோக்கில் மட்டக்களப்பில் உள்ள  பட்டிருப்பு, மட்டக்களப்பு, மட்டக்களப்பு மேற்கு, கல்குடா போன்ற கல்வி வலயங்களுக்கு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் செயலட்டைகளை சுமார் 7000 மாணவர்களுக்கு வருடந்தோறும் வழங்கி அதனூடாக சிறந்த அடைவுமட்டத்தை பெறுவதற்கு வழிவகுக்கின்றது. அதுபோல் இவ்வருடத்திற்கான வமாதிரி விநாத்தாழ்கள் மற்றும் செயலட்டைகளை வழங்கி வைக்கம் நிகழ்வு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது செவ்வாய்க்கிழமை (10) காரியாலயத்தில் நடைபெற்றது.

வினாத்தாள்களை மாணவர்களிடம் கையளிக்கும் போது இந்த சேவையானது எதிர்வரும் காலங்களிலும் மேலும் சிறப்பான முறையில் நடைபெறும் எனவும், வினாத்தாள்களையும், செயலட்டைகளையும் மாணவர்கள் சுயகற்றலினூடாக சிறந்த அடைவுமட்டத்தை அடைய வேண்டும். அதற்காக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் அயராத முயற்சியும் மாணவர்களின் திடமான நம்பிக்கையும் வலுச்சேர்க்க வேண்டும் எனவும் இரா.சாணக்கியன் தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: