1 Feb 2020

மட்டக்களப்பு மாவட்ட யுதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான அழைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்ட யுதிகளுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவதற்கான  அழைப்பு.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பல தமிழ் யுவதிகள் வெளி மாவட்டங்களிலும், இடங்களிலுள்ள வர்த்தக நிலையங்களிலும், சிறு சிறு கடைகளிலும், தொழிலுக்காகச் செல்கின்றனர். இவ்வாறு வாழ்வாதாரத்திக்காக தொழிலுக்குச் செல்லும் பெண்களை சில கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட சிலரினால் இம்சைப்படுத்தலுக்குட்பட்டு வருவதாக அறியமுடிகின்றது. 

என ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியிக் மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அணித் தலைவி ரசிகுமார் காஞ்சனா தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து வியாழக்கிழமை (30) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டம் ஒந்தாச்சிமடம் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் வெளிமாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ள இந்நிலையில் அப்பெண் உரிய வர்த்தக நிலைய உரிமையாளரால் பல தும்புறுத்தல்களுக்குள்ளாகி அண்மையில் அப்பெண் உயிரிந்துள்ளார்.

இவ்வாறான சம்பவம் தொடர்ந்து தமிழர் பகுதியில் இடம்பெற்று வருவதோடு, இச்சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டும் வருகின்றன. எனவே இனிமேல் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எந்தப் பெண்களும் எவரிடமும் கையேந்தவேண்டாம், எந்த கடைகளிலும், தொழிலுக்காகச் செல்லாமல், எம்முடன் வந்து இணையுங்கள். இவ்வாறு கடைகளில் தொழில் புரியும் யுவதிகளுக்கு, நாங்கள் உங்களது தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பைப் முன்னுரிமை அடிப்படையில், பெற்றுத்தர நாம் தயாராகவுள்ளோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அகளிர் அணித் தலைவி என்ற ரீதியில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் யுவதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மகளிர் விவகாய அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன்.

இனிமேலும் எமது தமிழ் பெண்கள் கடைகளிலும், வர்த்தக நிலையங்களுக்கும்,  தொழிலுக்காச் சென்று அங்குள்ளவர்களின் இம்சைப்படுத்தல்களுக்கும், வன்சொற்களுக்கும், குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை வாங்குவதும், கலாசார சீர்கேடுகளுக்கும், உட்படுவதிலிருந்து விடுபடுட வேண்டும்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து யுவதிகளும். இலக்கம் 23, இருதயபுரம் கிழக்கு, மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள எமது மாவட்டத் தலைமைக் காரியாலயத்திற்கு நேரில் வந்து உங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்;. உங்களது வசதிக்காக எமது காரியாலய  0652229854, 0772118880 போன்ற தொலைபேசி இலக்கங்களுடாக எம்முடன் தொடர்புகளை ஏற்படுத்த முடியும். என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: