19 Feb 2020

முறக்கட்டடான்சேனை விஷ்னு ஆலய மண்ணரிப்பைத் தடுக்க கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கை.

SHARE
முறக்கட்டடான்சேனை விஷ்னு ஆலய மண்ணரிப்பைத் தடுக்க கிழக்கு மாகாண ஆளுனர் நடவடிக்கை.

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்றதும் முக்கியம் வாய்ந்ததுமான முறக்கட்டடான்சேனை விஷ்னு ஆலயம் மற்றும் இராமகிருஸ்ண மிசன் வித்தியாலயம் என்பவற்றிற்கு சமீபமாக நீண்ட காலமாக ஏற்படும் பாரிய  மண்ணரிப்பு பாதிப்பை தடுப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் திருமதி.அனுராதா ஜயம்பத் மாவட்ட அரசாங்க அதிபரை பணித்துள்ளார்.


ஸ்ரீ ரமண மஹரிசி அறப்பணி நிலயத்தின் இலங்கை கிளை தலைவர் மாரிமுத்து செல்லத்துரை இந்த மண்ணரிப்பு பாதிப்பு பற்றி கிழக்கு மாகாண ஆளுனரின் கவனத்தைக் கொண்டு வந்ததையடுத்து மாகாண ஆளுனரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுனரின் செயலாளர் அசங்க அபேவர்த்தன இந்த பணிப்புரையை அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார்.

இந்த பணிப்புரைக்கு அமைய, மாவட்ட அரசாங்க அதிபர் அறிவுறுத்தலுக்கமைய மாவட்ட செயலக  காணிப்பிரிவு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூப ரஞ்சினி முகுந்தன் குறித்த மண்ணரிப்பைத் தடுக்க முன்னுரிமை அடிப்படையில் குறித்த மண்ணரிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரளைப்பற்று தெற்கு பிரதேச சபை செயலாளர் ஆர்.ராஜ்பாபுவிற்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.

குறித்த மண்ணரிப்பு பாதிப்பினால் இயற்கை வளம் கொண்ட மருதமர நீர் ஊற்றுக்கு ஆபத்து ஏற்பட்டு வருவதாகவும் ஸ்ரீ விஷ்னு ஆலய கட்டடங்கள், முறக்கட்டான்சேனை இராமகிருஷ்ண வித்தியாலயத்தின் கட்டிடங்களுக்கும், சேதம் ஏற்படவும், இதனால் இப்பாடசாலையின் கல்வி கற்றலுக்கும் ஆலயத்தின் சமய வழிபாட்டு நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவுவதாகவும், ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணிமன்றத் மாரிமுத்து செல்லத்துரை தமது வேண்டுகோளில் சுட்டிக்காட்டியுள்ளதுடன் இப்பிரதேச மாணவர்களின் கல்விக்கு பங்கம் ஏற்படாது இருக்கவும் ஆலயங்களுக்கு பாதிப்பு ஏற்படாது இருக்கவும் தலைவர் செல்லத்துரை தமது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மகிந்தராஜபக்ஷவின் பொதுச் சேவைகளை பாராட்டி பிரதமரின் சேவைகள் எதிர்காலத்தில் தழைத்து ஓங்கவும் வேண்டி பிரதமருக்கு வாழ்த்து செய்தியை அனுப்பிய ஸ்ரீ ரமண மகரிசி அறப்பணி நிலயத்தின் இலங்கை கிளைத் தலைவர் மாரிமுத்து செல்லத்துரைக்கு பிரதமர் மகிந்தராஜபக்ஷ நன்றி பாராட்டி கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நன்றி பாராட்டுதல் கடிதத்தில் தங்களின் வாழ்த்துச் செய்திக்கு மனப்பூர்வமாக நன்றி தெரிவிப்பதாகவும் எதிர்காலத்தில் மட்டக்களப்பு பிரதேச இந்து மக்களுக்கு தங்களால் முன்வைக்கப் படும் சமய அறப்பணிகளுக்கு அரசாங்க உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மகிந்தராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளதாக  பிரதமரின் அறிவுறுத்தலுக்கமைய பிரதம அமைச்சரின் அலுவலக உதவிப் பணிப்பாளர் ஷனிகா ஏக்கநாயக அறிவித்துள்ளார்.

இதேவேளை அறப்பணிமன்ற நிலயத்தின் இலங்கை கிழைத் தலைவர் செல்லத்துரை பாதுகாப்பு அமைச்சரின் செயலாளர் இழைப்பாறிய மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் நல்ல கடமையை பாராட்டியும், அவரது நியமனத்திற்கு அனுப்பிய வாழ்த்து செய்திக்கு பாதுகாப்பு செயலாளர் நன்றி பாராட்டி அவருக்கு கடிதம்; அனுப்பி வைத்துள்ளர். மேலும் இக்கடிதத்தில் தமது சேவையில் மேலும் இந்து மக்களின் நன்மை கருதி முன்வைக்கப்படும் நியாயமான கோரிக்கைகளுக்கு தான் கவனம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தமது பாராட்டு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

SHARE

Author: verified_user

0 Comments: