23 Feb 2020

கடந்த அரசாங்கத்திடம் இழந்த அபிவிருத்தியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டு மட்டக்களப்புக்கு கொண்டு வாருங்கள் என மக்கள் கோரிக்கை - பொதுஜன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார்.

SHARE
கடந்த அரசாங்கத்திடம் இழந்த அபிவிருத்தியை ஜனாதிபதியிடம் இருந்து பெற்றுக்கொண்டு மட்டக்களப்புக்கு கொண்டு வாருங்கள் என மக்கள் கோரிக்கை - பொதுஜன கட்சியின் அமைப்பாளர் சந்திரகுமார்.
ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்மக்கள் இளைஞர்கள் பெண்கள் புத்திஜீவிகள் அனைவரும் நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து ஆளுந்தரப்புக்கு வாக்களித்து அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரை இம்முறை  பெற்று நாhளுமன்றம் அனுப்பி ஐக்கிய தேசிய கட்சியிடம் இழந்த அபிவிருத்தியை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டு வாருவதற்றுத் திடசங்கற்பம் பூண்டுள்ளாரத்கள். என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன கட்சியின் அமைப்பாளர் பரமசிவம் சந்திகுமார் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரை மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் உள்ள இருநூறுவில் கிராம இளைஞர் கழகத்தினர் ஞாயிற்றுக்கிழமை(23) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மாவட்ட அலுவலகத்தில் சந்தித்து நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாகவும் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரை மாவட்டத்திலிருந்து அனுப்புவதற்கு மாவட்ட ரீதியாக இளைஞர் கழகங்களூடாக தெளிவூட்டி, அபிவிருத்தியை இனங்கண்டு ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துiராயாடினர். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் அணித்தலைவர் நல்லையா சஞ்சீவ் இருநூறுவில் இளைஞர் கழகத்தலைவர் மயில்வாகனம் துரைராசா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. வடகிழக்கில் யுத்தம் மௌனிக்கப்பட்டு 11 ஆண்டுகளை கடந்துள்ள இந்நிலையில் தமிழர் பகுதியில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் அபிவிருத்திகள் செய்து கொடுக்கப்படவில்லை. அபிவிருத்தி மாயைக்குள் சிக்குண்டு தமிழர்கள் பகுதிகள் இன்னும் முழுமையாக அபிவிருத்தியடையவில்லை. ஐக்கிய தேசியகட்சி அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்த தமிழ்த் தலைமைகள் கோத்தபாய அரசாங்கத்தை பார்த்து கொக்கரிக்கின்றார்கள். இவர்கள் கொக்கரித்தாலும் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கம் இன்னும் 10 ஆண்டுகள் தொடரப்படும். ஜனாதிபதி மற்றும் பிரதமர் சொன்னதை செய்துகாட்டுபவர்கள். அபிவிருத்தி வேலைகள் ஒருநாளும் நிறுத்தப்படமாட்டாது.

ஒரு இலட்சம் பேருக்கான வேலைவாய்ப்புக்களுக்கான நேர்முகத்தேர்வு எதிர்வரும் புதன்கிழமை நாடுபூராகவும் உள்ள பிரதேச செயலகங்களில் இடம்பெறவுள்ளன. இளைஞர் யுவதிகள் ஜனாதிபதி கோத்தபாய அரசாங்கத்தை பலப்படுத்தி தமிழ் மக்களும் தமிழ் சமூகம் இழந்துபோன அபிவிருத்தியை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும். நாங்களும் இந்தநாட்டிற்கு உரித்தான மக்களாக வாழ்கின்றோம். நாங்களும் வரிப்பணம் செலுத்துகின்றோம். எங்களுக்குரித்தான அபிவிருத்தி அபிலாஷைகளை நாட்டின் ஜனாதிபதியிடம் பெற்றுக்கொள்வதில் என்ன தவறு இருக்கின்றது. கடந்த காலங்களில் எங்களையும் தமிழ் சமூகத்தையும் சரியாக வழிநடாத்தாத தமிழ் தலைமைகளால்தான் எங்களுடைய அபிவிருத்தியை இன்னொரு சமூகம் அனுபவித்து உயர்வடைவதற்குக் காரணமாக இருக்கின்றார்கள்.

இதனை தமிழ் மக்கள் ஆழமாக சிந்திக்கவேண்டும். நில,நிருவாக, அரசியலில் நாம் கீழே தள்ளப்பட்டோம். இனியும் நாம் ஏமாளியாக வாழக்கூடாது. தமிழ்மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் சாமர்த்தியமான அபிவிருத்தியில் இணைந்திருங்கள். ஏமாந்த, ஏமாற்றப்பட்ட அரசியல் செயற்பாடு தமிழ்மக்களுக்கு இன்று பொருத்தமில்லை என தமிழ்மக்கள் உணர்ந்துள்ளார்கள். நாங்கள் மிகவிரைவில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் அபிருத்தியை கிழக்குக்கும், மட்டக்களப்புக்கும் கொண்டுவரும் அரசியல்கட்சியை உருவாக்கி அபிவிருத்தியை பெறுவோம் எனத் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: