26 Feb 2020

கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் எஸ்.வியாழேந்திரன்.

SHARE
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் - மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவர் எஸ்.வியாழேந்திரன்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டம் செவ்வாய்கிழமை (25) மாவட்ட செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவின் ஒருங்கிணைப்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றுது.

இந்த ஆண்டு அபிவிருத்திக்கென 822 திட்டங்களுக்கு 1040 மில்லியன் ரூபாவினை அரசாங்கம் ஐந்து செயற்றிட்டங்கள் ஊடாக வழங்கியுள்ளது. இது தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் “சப்ரி ஹமக்கிராம அபிவிருத்தி திட்டம்” கிராமிய உட்கட்டமைப்பு மேம்;பாட்டு திட்டம், வீட்டு திட்டம், தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுதிட்டம் ஆகியவற்றிறகான நிதிகள் ஒதுக்கீடுகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

கடந்த ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1040 மில்லியன் ரூபாவில் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் முடிவுறுத்தப்பட்ட திட்டங்கள், குறித்தும் இதன்போது ஆராயப்பட்டன. புதிய அரசாங்கம் ஆட்சியமைத்ததை தொடர்ந்து அரசாங்கத்தினால் எந்த திட்டங்களும் இடைநிறுத்தப்படாது எனவும், தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும், எனவும் நாடாளுமன்ற உறுப்பினர வியாழேந்திரன் இதன்போது தெரிவித்தார். 

மாவட்டத்தில் திணைக்களங்கள் ரீதியான முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிரநோக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன. இக்கூட்டத்தில், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் திணைக்களத்தலைவர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



SHARE

Author: verified_user

0 Comments: