12 Feb 2020

மட்டக்களப்பு கன்னங்குடாவிலிருந்து தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்ட கலைஞர்களை வரவேற்கும் நிகழ்வு.

SHARE
மட்டக்களப்பு கன்னங்குடாவிலிருந்து தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்து கொண்ட  கலைஞர்களை வரவேற்கும் நிகழ்வு. 
மட்டக்களப்பு கன்னங்குடாவிலிருந்து இந்தியா தமிழ்நாடு புதுச்சேரியில் நடைபெற்ற 14வது உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொண்டு தாயகம் திரும்பிய கலைஞர்களை வரவேற்கும் நிகழ்வு புதன்கிழமை (12) நடைபெற்றது.

கன்னங்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்வில் கன்னங்குடா கிராம மக்கள், கண்ணகியம்மன் ஆலய நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு கன்னன்குடா கிராமம் கூத்துக்குப் பேர்போன கிராமம் என்பதனை இன்று வரையும் உணரப்பட்டுள்ளது. அக்கலை இற்றைவரையும் இலங்கைத் தீவுக்குள்ளே ஆற்றுகை செய்யப்பட்டு வந்தது. அதனை உலகத்தில் உள்ளவர்களும் அறிய வேண்டும் என்பதற்காக, கடந்த 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை 14 வது உலகத் தமிழர் பண்பாட்டு மாநாட்டில் கலந்துகொள்ளவதற்காக கன்னங்குடாவிலிருந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற இவர்கள் அங்கு நடைபெற்ற உலக அரங்கில் தமது கலைத்திறமைகளை வெளிக்காட்டி பலராலும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

இதன்போது 11 கலைஞர்களையும் கன்னங்குடா கண்ணகி முத்தமிழ் மன்றத்தினரும் கிராம மக்களும் மாலை அணிவித்து, பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்றதுடன், கண்ணகியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூசைகளிலும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அந்த மாநாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்களும் வந்திருந்து, அக்கலையினை வியந்து ரசித்துள்ளனர். மட்டக்களப்புத் தமிழகத்தின் பாரம்பரியக் கலை பண்பாட்டு மாநாட்டில் மேடையேறியமை யாவருக்கும் பெருமையே. எனவேதான், கன்னன்குடா கலைஞர்கள் அங்கு அறிமுகத்துடன் உலகத்திற்கு அடையாளமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.





SHARE

Author: verified_user

0 Comments: