16 Jan 2020

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப்பொங்கல் விழா

SHARE
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தைப்பொங்கல் விழா.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் வருடந்தோறும் நடாத்தப்பட்டு வருகின்ற தைப்பொங்கல் விழா இம்முறையும் நடாத்துவதற்கு தீர்மாணிக்கப்பட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் எதிர்வரும் 17ம் திகதி வெள்ளிக்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமாரின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இத்தைப்பொங்கல் விழாவினை சிறப்பிப்பதற்காக மாவட்டத்தின் 14 பிரதேசசெயலக பிரிவுகளையும் சேர்ந்த பிரதேசசெயலாளர்கள் மற்றும் திணைக்களத்தலைவர்கள் ,கிராம அபிவிருத்தி சங்கத்தின் பிரதிநிதிகள்,சமூர்த்தி சங்கங்கள் மற்றும் அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவிலுள்ள ஈச்சந்தீவு கண்ணகி அம்மன் ஆலயமானது பழைமைமிக்க ஆலயமாதலால் இவ்வாலய முன்றலிலே இப்பொங்கல் விழாவினை நடாத்துவதற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் மிகச்சிறப்பாக ஒழுங்கமைத்து நாளை காலை வெள்ளிகிழமை 6 மணிக்கு இவ்விழா மாட்டு வண்டில்களின் பண்பாட்டு பவனியுடன் ஆரம்பிக்கப்பட்டு நெல் அறுவடை நிகழ்வும் இங்கு சிறப்பாக நடைபெறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளை மாவட்ட பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.    

இதனைத்தொடர்ந்து அரிசி குற்றும் நிகழ்வும் கலை நிகழ்ச்சிகள் பாரம்பரிய கலாச்சார நிகழ்ச்சிகள் அத்தோடு பாரம்பரியமான வாழ்கை முறையினை பிரதிபலிக்கின்ற வீடுகளும் மக்கள் பார்வைக்காக அமைக்கப்பட்டுள்ளது.

இப்பொங்கல் விழாவிலே 17 பொங்கல் பானைகள் வைக்கப்பட்டு பொங்கல் பொங்குவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தகவல் திணைக்கள ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.





SHARE

Author: verified_user

0 Comments: