1 Jan 2020

மட்டக்களப்பு மாநகர பிரிவில் வெள்ளத்தினால் அழிவுக்குள்ளான வீதிகளைச் செப்பனிடும் பணிகள் துரிதம்.

SHARE
மட்டக்களப்பு மாநகர பிரிவில் வெள்ளத்தினால் அழிவுக்குள்ளான வீதிகளைச்  செப்பனிடும் பணிகள் துரிதம்.
மட்டக்களப்பு மாநகரப் பிரிவில் சமீபத்திய வெள்ளத்தினால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு போக்குவரத்து செய்ய முடியாமல் இருந்த எல்லை வீதியையும் பார் வீதியையும் இணைக்கும் தனியார் குறுக்கு வீதியை மாநகரசபை தன்வசப்படுத்தி அதற்கு கொங்கிரீட் இட்டு புனரமைக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை 31.12.2019 ஆரம்பமானது.

மக்கள் வரிப்பணத்திலிருந்து வட்டாரத்திற்கு ஒரு வேலைத்திட்டம் என்ற அடிப்படையில் 2 மில்லியன் ரூபாய் செலவில் 160 மீற்றர் நீளமான பாதை நிருமாணம் இடம்பெறுகிறது.

மட்டக்களப்பு அரசடி 10ஆம் வட்டார உறுப்பினரும் மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவருமான சிவம் பாக்கியநாதனின் முயற்சியினால் இந்த வீதி புனரமைக்கப்பட்டது.

வீதி கையேற்றல், புனரைமப்பு செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரீ. சரவணபவன், மாநகரசபை உறுப்பினர்களான ரீ. மதன், ரீ. இராஜேந்திரன், எம். நிஸ்கானந்தராஜா மாநகர பிரதி ஆணையாளர் யு. சிவராஜா ஆகியோர் கலந்து கொண்டு வீதிப் புனரமைப்பு வேலைகளை ஆரம்பித்து வைத்தனர். ‪






SHARE

Author: verified_user

0 Comments: