9 Jan 2020

வெள்ளத்தில் சேதமைந்த நெற் செய்கைக்கு நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை.

SHARE
வெள்ளத்தில் சேதமைந்த நெற் செய்கைக்கு நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை.
மட்டக்களப்பு மாட்டத்தில் கடந்த வருட இறுதியில் பெய்த பலத்த அடை மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கத்தினால் பெரும்போக நெற்செய்கையில் ஈடுபட்டிருந்த விவசாயிகளின் பெரும்பாலான நெல் வயல்கள் முற்றாகச் சேதடைந்துள்ளதாக விவாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு சேதமடைந்த விவசாயிகளுக்கு அரசாங்கம் துரித கதியில் நிவாரணங்களை வழங்கினால்தான் அதனை வைத்துக் கொண்டு தாம் எதிர்வருகின்ற சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடலாம் எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெரு நிலப்பரப்பு உள்ளிட்ட பல பகுதிகளிலும் மழைய நம்பி மேற்கொள்ளும் பொரும்போக  நெற் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அவர்களது வாழ்வாதாரத்திற்கு ஆதரமாக உள்ள தொழில் பாதிப்படைந்துள்ளதாக அங்கலாய்க்கின்றனர்.

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் மட்டக்களக்களப்பு மாவட்டத்தில் சேதமைந்துள்ள நெற்செயை;கை தொடர்பான விபரங்களைத் திரட்டி வருகின்றோம். இதுவரையில் 15000 விவசாயிகள் தமது விபரங்களை வழங்கியுள்ளார்கள், இவற்றினைவிட மாவட்டத்திலுள்ள அனைத்து கமநல கேந்திர நிலையங்களுடாக பாதிப்புக்கள் தொடர்பான விபரங்கள் திரட்பட்டு வருகின்றன. என கமத்தொழில மற்றும் கமநல காப்பறுத்திச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: