4 Jan 2020

சமாதான செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார்.

SHARE
சமாதான செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டேன் - ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன ஒற்றுமையச் சீர்குலைத்து, தமிழ் மக்களையும், முஸ்லிம் மக்களையும், சீண்டிவிட்டு வேடிக்கைபார்க்கும் யாராக இருந்தாலும் அதனை நாம் முன்னின்று தடுத்து சமாதான செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டேன். அதற்காக வேண்டி வேண்டுமென்றே தமிழ் மக்களின் மீது வீண் பழியைச் சுமர்த்தி மீண்டும் தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கும் செயற்பாடுகளையும் யார் செய்தாலும் அதனைநாம் உடன் நிறுத்துவோம்.

என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பில் அவர் சனிக்கிழமை (04) விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்டகாலமாகவிருந்து தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்து வருகிகன்றார்கள், தமிழர்களின் கிராமஙகளுக்குள் முஸ்லிம்கள் சென்று வியாபார நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள். அதுபோல் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களில் பொருட்களையும், ஆடைகளையும் தமிழ் மக்கள் கொள்வனவு செய்து வருகின்றார்கள். இந்த வியாபார நடவடிக்கைகள் பரஸ்பரம் இடம்பெற்றுக் கொண்டுதான் வருகின்றன.

அதற்காக வேண்டி முஸ்லிம் மக்களில் சிலர் தமிழ் மக்கள் சொத்துக்களயும், ஏனைய விடையங்களையும், சூறையாடினால் அதனை நாம், வியாபார நடவடிக்கை போல் வெறுமனே விட்டு, விட்டு பார்திருக்கமாட்டோம். என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்நிலையில் தமிழர்களின் பகுதிகளுக்கு முஸ்லிம் வியாபாரிகள் சென்று அவர்களது வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதில் எதுவித பிரச்சனைகளும் இருக்காது என நான் அமையில் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்திருந்தேன். இதனை தமிழ் மக்கள் உணவாளர்கள் அமைப்பின் தலைவர் க.மேகன் மற்றும், இதுவரை காலமும் வெளிநாட்டிலே இருந்துவிட்டு தற்போது இங்கு வந்து அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கம் கண்ணீர் துள்ளிகள் எனும் அமைப்பின் தலைவர் க.வைத்தியலிய்கம் என்பவர் தவறாக புரிந்த கொண்டு வீண் கருத்துக்களை சமூக ஊடகங்கள் வாயிலாக பரப்பி வருகின்றார்.

மலர்ந்திருக்கின்ற எமது புதிய ஆட்சி இலங்கையில் அனைத்து மக்களையும் ஒரே பார்வையில்தான் பார்த்து செயற்பட்டு வருகின்றது. இதிலே சாதி, மதம், இன வேறுபாடுகள் இடையாது. இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம், வியாபாரத்தை வைத்துக் கொண்டு யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. நான் எப்போதும் தமிழ் மக்களின், மக்கள் சேவகனாகத்தான் திகழ்கின்றேன் என்பதை தமிழ் உணவாளர்கள் அமைப்பின் தலைவர் க.மேகன், கண்ணீர் துள்ளிகள் அமைப்பின் தலைவர் க.வைத்தியலிய்கம் போன்றவர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். இவ்விடையத்தில் தமிழர்களின் பகுதிக்குள் முஸ்லிங்களும், முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்குள் தமிழர்களும் பரஸ்பரம் வியாபாரம் செய்துதான் வருகின்றார்கள். இதனை யாரும் இனவாதமாகவோ, வேறுபாடாகவோ பார்த்தால் அது அவர்களின் பார்வைக் குறைபாடு என்றுதான் சொல்ல வேண்டும். 

மாறாக அரசியல் ரீதியில் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு தமிழ் மக்கள் வாக்கழிப்பதைப் பழக்கியதும், உருவாக்கியதும் கடந்த காலத்திலிருந்து வந்த தமிழ் அரசியல் தலைவர்கள் என்பதைய யாரும் மறுக்க முடியாது. எதிர்வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள எந்த ஒரு தமிழனும் எந்தவொரு முஸ்லிம் வோட்பாளருக்கும் வாக்களிக்காமல் தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் தமிழர்கள் வாக்களிக்கும் வரலாற்று சம்பவத்தை அனைவரும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

எனவே சொந்த அரசியல் விருப்பு வெறுப்புக்களை வைத்துக் கொண்டு, யாரும் இந்த மாவட்டத்தில் சமாதானத்திற்கு குந்தகம் ஏற்படாத வகையில்,  அவர்களது அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கின்றேன். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


SHARE

Author: verified_user

0 Comments: